தமிழக அரசியலில் புதுப்புது ஆட்களாக களமிறங்கி வருகின்றனர். தமிழ் திரையுலக ஜாம்புவான்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் தனித்தனியாக புது கட்சியை ஆரம்பித்து முழு நேர அரசியலில் இறங்கி விட்டனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருமே காமெடி. இவர்களால் அரசியலில் ஜெயிக்க முடியாது. கமலுக்கு மைக் பிடிக்கவே தெரியாது. ரஜினி படத்தை ரிலீஸ் செய்ய கூட்டம் கூட்டவே இவ்வாறு செய்து வருகிறார் என பிரபல இயக்குனரான ஷக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

கோபியில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் ஷக்தி சிதம்பரம் இவ்வாறு பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.