இனி ஜென்மத்துக்கும் உங்களோட ஆசை நிறைவேறாது என தனுஷை கண்டித்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

Rajini Fans Comments to Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 வருடங்களாகும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இனி உங்களோட அந்த ஆசை ஜென்மத்துக்கும் நிறைவேறாது.. தனுஷ்க்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம்

இப்படியான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஜினி ரசிகர்கள் தனுசை சமூக வலைதளங்களில் அன் ஃபாலோ செய்து வருகின்றனர்.

மேலும் பல பேட்டிகளில் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் அல்லது அவரை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என தன்னுடைய ஆசையை கூறி வந்தார். இனி உங்களுடைய இந்த ஆசை ஜென்மத்திற்கும் நிறைவேறாது என ரஜினி ரசிகர்கள் தனுஷுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இனி உங்களோட அந்த ஆசை ஜென்மத்துக்கும் நிறைவேறாது.. தனுஷ்க்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம்

கடந்த இரண்டு நாட்களாகவே இவர்களின் விவாகரத்து விஷயம் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.