Rajini

இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி தற்போது ரிஷிகேஷில் தங்கியுள்ளார். அங்கு பல ஆசிரங்களில் அவர் தியானங்களை செய்து வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் செல்லும் இடமெங்கும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், ரிஷிகேஷில் ரஜினி ஒரு கடையில் சில புத்தங்கங்களை அவர் வாங்கினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவருடன் அவரின் மகள் ஐஸ்வர்யா தனுஷும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.