Rajini asks Siva : Superstar Rajinikanth, Thala Ajith, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Rajini asks Siva :

தனக்கு பி & சி ஏரியாவில் ரசிகர்கள் குறைவதை உணர்ந்த ரஜினி அதை சரி செய்வதற்காக இப்படி ஒரு கதையை சிவாவிடம் தயார் செய்யச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா? சூப்பர் அப்டேட்!

இந்தப் படம் முடிந்ததும் தேர்தலுக்கு முன்பாக இன்னும் மூன்று படங்களில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார், இதில் ஒரு படத்தை சிறுத்தை சிவா இயக்குவது உறுதியாகி விட்டது.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இது ஒரு பக்கா வில்லேஜ் கதையாம் தனக்கு பி & சி ஏரியாவில் ரசிகர்கள் குறைவதை உணர்ந்த ரஜினி அதை சரி செய்வதற்காக இப்படி ஒரு கதையை சிவாவிடம் தயார் செய்யச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.

சிவாவும் அதற்கேற்ப கதையை உருவாக்கி தற்போது அந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.