Rajini & ARM

Rajini & ARM Movie : முருகதாஸ், ரஜினி இணைய உள்ள படத்தை பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படம் உருவாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ள விஸ்வாசம் படத்துடன் மோத உள்ளது.

இந்த படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அதனையடுத்து பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருந்தன.

இதனால் முருகதாஸ் படம் என்னவானது? தள்ளி போகிறதா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

தற்போது இது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முருகதாஸ் படம் முடிந்த பிறகு தான் மீண்டும் கார்த்திக் சுப்புராஜிற்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளாராம் ரஜினிகாந்த்.

மேலும் ரஜினி, முருகதாஸ் இணைய உள்ள படத்தின் படப்பிடிப்புகள் வரும் பிப்ரவரி மாத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் கூடுத தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.