Rajini and kamal 
Rajini and kamal 

Rajini and kamal : 2.0, பேட்ட படங்களோட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினி அதே வேகத்தில அடுத்ததா முருகதாஸ் படத்தில நடிக்கவிருக்காரு.

முன்னதா இந்த படம் போன மாசமே தொடங்குறதா இருந்துச்சு.

ஆனா படத்த தயாரிக்கிற லைக்கா நிறுவனத்துக்கு போதுமான அளவு இன்னும் பைனான்ஸ் கிடைக்கலையாம்.

இப்போ இந்தியா முழுக்க தேர்தல் களம் சூடுபிடிச்சிருக்கிறதால இந்தியாவுக்கு வெளிநாட்டுல இருந்து பணம் கிடைக்கிறதில சிக்கல் நிலவிட்டு வருதாம்.

இதன் காரணமாவே போன மாசம் தொடங்கவிருந்த ரஜினி படம் இந்த மாசத்துக்கு தள்ளிபோய் இருந்துச்சு.

அந்த வகையில ஏப்ரல் 10-ம் தேதி ரஜினி 167 படத்தோட படப்பிடிப்பு மும்பைல தொடங்கும்னு எதிர்பார்க்கப்படுது.

ரஜினி படத்துக்குதான் இப்படியொரு சிக்கல்னா கமலோட இந்தியன் 2 படத்துக்கு பைனான்ஸ் கிடைக்கிறதுலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கு.

கமலோட கடைசி வெளியீடுகளான உத்தமவில்லன், தூங்காவனம், விஸ்வரூபம் 2 போன்ற படங்கள் வணிக ரீதியா தோல்வியை தழுவினதுனால இந்த படத்துக்கு எதிர்பார்த்த அளவிலான பைனான்ஸ் கிடைக்கிறதுல சிக்கல் ஏற்பட்டிருக்காம்.

அதே சமயத்தில இந்த படத்தோட பட்ஜெட் 350 கோடிங்கறதும் தயாரிப்பு தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்காம்.

கமலும் இப்போ தேர்தல் களத்தில தீவிரமா இருக்க நிலையில இந்த பிரச்னைகள் எல்லாம் சரி செய்யும் பட்சத்தில மே இறுதியிலதான் இந்தியன் 2 தொடங்கும்னு சொல்லப்படுது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.