ரஜினி- லோகேஷ் கூட்டணியில் உருவாகும் ரஜினி 171 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் மிக முக்கியமான மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கும் ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக போகும் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை படகுழு சமீபத்தில் தெரிவித்திருந்தது தொடர்ந்து விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மாபெரும் பட்ஜெட்டில் தயாரிக்க போவதாக புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.