Rajini 167 First Look Release Date
Rajini 167 First Look Release Date

Rajini 167 First Look Release Date – 2.0, பேட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினி தயாராகி வருகிறார்.

தந்தை – மகள் செண்டிமெண்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ரஜினியின் மகளாக ஜில்லா, பாபநாசம் படங்களில் நடித்த நிவேதா தாமஸ் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

காப்பான் இசை குறித்த முக்கிய அப்டேட் – யார் பாடினார் தெரியுமா?

மேலும் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் நிலையில் இதன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் வரும் 9-ம் தேதி மும்பை செல்கிறார்.

இந்நிலையில் முதல் நாள் படப்பிடிப்பின் போதே இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.

பேட்ட Vs விஸ்வாசம் : முதல் நாள் ஓவர்சீஸ் வசூல் நிலவரம் – யாரு டாப் தெரியுமா?

ரஜினியின் முந்தைய படங்களான 2.0, காலா, கபாலி போன்ற படங்களின் முதல்நாள் படப்பிடிப்பிலும் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.