thalaivar-166

Rajini 166 : 11 வருடங்களுக்கு பிறகு மெகா கூட்டணியுடன் தலைவர் 166 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டடித்த பேட்ட திரைப்படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ராஜா ராணி வில்லிக்கு திருமணம் – மாப்பிள்ளை யாருனு தெரியுமா?

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் முதல் வாரத்தில் தொடங்க இருந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தள்ளி போயுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் 10-ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

11 வருடங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான குசேலன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.