Rajamouli Next Hero Details
Rajamouli Next Hero Details

ராஜமௌலியின் அடுத்த பட ஹீரோ யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Rajamouli Next Hero Details : தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் இவர்.

பாகுபலி படத்தில் தொடர்ந்து ராஜமவுலி RRR படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பேச்சுலர் வாழ்க்கைக்கு பாய் பாய் சொல்லும் பிரபாஸ் – திருமணப் பெண் குறித்த தகவல் இதோ.!

கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவை வைத்து அடுத்ததாக ராஜமௌலி பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.