சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ராஜ வம்சம் படத்தில் முழு விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Raja Vamsam Movie Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இயக்குனராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ராஜவம்சம். கதிர்வேலு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக நடிக்க பல்வேறு திரையுலக பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :

கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த சசிகுமார் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இவருடைய கம்பெனியின் ஒரு ப்ராஜெக்ட் கொடுக்கப்படுகிறது. மிகப்பெரிய பிராஜெக்ட் ஆன இதை தனது கனவு பிராஜக்ட்டாக அவர் செய்ய முயற்சி செய்கிறார். இந்த நேரத்தில் அவருடைய குடும்பத்தார் அவருக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கின்றனர்.

பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

திரையரங்குகளில் சசிகுமாரின் ராஜ்யம் தான் - ராஜ வம்சம் படத்தின் முழு விமர்சனம்

கடைசியில் ப்ராஜக்ட்டா? திருமணமா? என்ற கட்டத்தில் வந்து நிற்கிறார் சசிகுமார். அதன்பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் சசிகுமார் வழக்கம் போல தன்னுடைய பாணியில் நடிப்பை மிரட்டியுள்ளார். அதுவும் ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்புகிறார்.

நிக்கி கல்ராணி அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.

படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் படத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். யோகி பாபுவின் காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

திரையரங்குகளில் சசிகுமாரின் ராஜ்யம் தான் - ராஜ வம்சம் படத்தின் முழு விமர்சனம்

Jai Bhim -க்கு அடுத்து இந்த படம் தான் – Maanaadu DAY 2 Public Review | Simbu | STR | SJ Suriya

இசையைப் பொறுத்தவரை சாம் சி எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் சுமார் ரகம்.

படத்தின் ஒளிப்பதிவு கனகச்சிதம். பக்கா கிராமத்து கதையாக காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

இயக்குனர் கதிர்வேலு படத்தில் ஒவ்வொரு நடிகர்கள் இடமும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். படத்தின் வசனங்கள் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.