Raja Rani2 Sidhu Marriage Details

பாக்கியலட்சுமி செழியன் – ஷபானா திருமணத்தை தொடர்ந்து ராஜா ராணி 2 பிரபலம் திருமண வாழ்க்கையில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Raja Rani2 Sidhu Marriage Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடித்துவரும் ஆர்யன் செம்பருத்தி சீரியலில் நடித்துவரும் ஷபானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தமிழகத்தில், எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை

அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜோடிகளாக இருந்து வந்த ரேஷ்மா மதன் ஆகியோர் காதலித்து ரியல் ஜோடியாக திருமணம் செய்து கொண்டனர். அதேபோல் சமீபத்தில் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வந்த வைஷாலி அவருடைய காதலரை கரம்பிடித்தார். தொடர்ந்து சீரியல் நடிகைகள் தங்கள் உடன் நடித்து வரும் நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர்.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review | Santhanam, Pugazh, MS.Bhaskar | HD

இவர்களைத் தொடர்ந்து வெகு விரைவில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியல் இணைந்து நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா ஆகியோர் திருமண வாழ்க்கையில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த சீரியலில் இணைந்து நடிக்கும்போது காதலித்தனர். தற்போது வரை காதலித்து வருகின்றனர்.

திருமணம் சீரியல் சித்து தற்போது ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.