கருவை கலைக்க திட்டம் போட்டு செந்திலோடு வெளியே கிளம்பியுள்ளார் அர்ச்சனா.

Raja Rani2 Episode Update 28.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சிவகாமி பணம் காணாமல் போய்விட்டது எண்ணி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார். பணத்தையும் யாரும் கொண்டுவந்து வைக்கல, ஆனாலும் வீட்ல இப்படி ஒரு விஷயம் நடந்த அடையாளமே தெரியாமல் எல்லோரும் சர்வசாதாரணமாக இருக்கிறார்கள். பணத்தை கண்டுபிடிக்க என்ன செய்வது என கேட்க சிவகாமியின் கணவர் இரண்டு நாள் போகட்டும் பணத்தை எடுத்தவர்கள் கை சும்மா இருக்காது எதையாவது செலவு செய்தார்கள் அப்போது தெரிந்துவிடும் என கூறுகிறார்.

கருவை கலைக்க கிளம்பிய அர்ச்சனா, சந்தியாவுக்கு வந்த சந்தேகம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

சந்தியா இதைப் பத்தி நீ என்ன நினைக்கிற எனக்கேட்ட சிவகாமி அவரே நீ போலீசுக்கு போகலாம் என்றுதான் சொல்லுவ என பதில் சொல்கிறார். உடனே சந்தியா இல்லாத மாமா சொல்றதுதான் சரி இரண்டு நாள் போகட்டும் என கூறுகிறார். பிறகு பார்வதி எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என சீக்கிரமாகவே கிளம்பி விடுகிறார். சரவணன் வெளியில் வேலை இருக்கு என சந்தியாவை கடைக்கு வருமாறு சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.

இந்த நேரத்தில் வந்த செந்தில் எப்படி என சொல்லிவிட்டு வெளியே போகிறது என அர்ச்சனாவிடம் கேட்க நீங்க மூஞ்ச டல்லா வெச்சுக்கங்க மீதியை நான் பார்த்துகிறேன் என அர்ச்சனா கூறுகிறார். பிறகு அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் என அழுது டிராமா போடுகிறார். இதை நம்பி சிவகாமி மற்றும் அவருடைய கணவர் ஆகியோர் வருகின்றனர். ஆர்எஸ் ஹாஸ்பிடலில் சேர்த்து இருப்பதாக கூறுகிறார். சரி எல்லோரும் போய் பார்த்துட்டு வந்துடலாம் என சிவகாமி சொல்ல செந்திலும் அர்ச்சனாவும் வேண்டாம் முதலில் நாங்க போயிட்டு அங்க என்ன நிலைமை என்பதை பார்த்துட்டு சொல்கிறோம் என சமாளித்து அவர்கள் இருவர் மட்டும் கிளம்பி விடுகின்றனர்.

பிறகு அர்ச்சனாவும் செந்திலும் இருப்பதிலேயே குறைவாக காசு வாங்கும் லாட்ஜ் எது என்று தேடி பிடித்து செல்கின்றனர். அது தவறான உறவுகளை வைத்துக் கொள்வதற்காக பெரும்பாலானோர் பயன்படுத்தும் லாட்ஜ் என்பது இவர்களுக்கு தெரியவில்லை. இரண்டு நாளைக்கு ரூம் வேண்டும் என கேட்க அங்கே இருந்த அவர் இங்கு வரவும் எல்லாருமே அரை மணி நேரம் ஒரு மணி நேரம் தான் கேப்பாங்க பரவால்ல நீங்க ரெண்டு நாளைக்கு கேட்கறீங்க 2000 ரூபாய் கொடுங்க என வாங்கிக் கொள்கிறார்.

அதன் பின்னர் அந்த லாட்ஜில் அமர்ந்திருந்த இருவர் அர்ச்சனாவை தவறான பார்வையில் பார்க்க அர்ச்சனாவுக்கு சந்தேகம் வருகிறது. இதனை செந்திலிடம் சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல ஒரு பிரச்சனையும் வராது என கூறி விடுகிறார்.

இந்த பக்கம் கடையில் இருந்து அந்த சந்தியா வரும்போது காய்கறிகளை வாங்கி வருகிறார். மயிலு அர்ச்சனாவின் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் என்ற விஷயத்தை கூறுகிறார். Rs மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக சொல்கிறார். இந்த மருத்துவமனை பெயரைக் கேட்டதும் சந்தியாவுக்கு ஏதோ தப்பாக படுகிறது என யோசிக்கிறார்.

பிறகு சிவகாமி போலீசாரால் கைது செய்யப்பட்ட போது அர்ச்சனா இந்த ஆஸ்பிட்டலில் தான் அட்மிட் ஆகி இருப்பதாக கூறியது அவருக்கு நினைவுக்கு வருகிறது. இதனால் அத்தை மீது போலீசில் புகார் கொடுத்து அவரை கைது செய்ய வைத்தது அர்ச்சனா தான் என சந்தியா புரிந்து கொள்கிறார். இருந்தாலும் ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லக்கூடாது என திட்டம் போடும் சந்தியா அந்த மருத்துவமனைக்குச் சென்று நேராக விசாரிக்க முடிவு செய்கிறார்.

கருவை கலைக்க கிளம்பிய அர்ச்சனா, சந்தியாவுக்கு வந்த சந்தேகம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

மயில் இடம் சென்று நீ அந்த ஹாஸ்பிடல் பேரு ஆர் எஸ் ஹாஸ்பிடல் என்றுதானே சொன்னேன் என கேட்கிறார். மயிலே ஆமாம் அந்த ஆஸ்பிட்டல் இங்கேதான் இருக்கிறது என இருக்கும் இடத்தை கூறுகிறார். ஹாஸ்பிடல் போன் நம்பர் இருக்கா என சந்தியா கேட்க செந்தில் அய்யாவுக்கு போன் பண்ணுங்க என கூறுகிறார். சரி நான் போன் பண்ணி கேட்கிறேன் என சொல்லிவிட்டு இந்த விஷயம் ஆதாரத்தோடு தெரியும் வரை யாருக்கும் இதைப் பற்றி சொல்ல கூடாது என சந்தியா திட்டமிடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.