சந்தியாவை பழி வாங்க அர்ச்சனா செய்த வேலை அனைவரையும் பதற வைத்துள்ளது.

Raja Rani2 Episode Update 20.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சிவகாமி ரூமில் தன்னுடைய கணவரிடம் சந்தியா பற்றி பெருமையாக பேசி கொண்டிருக்கிறார். அந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை ஆளாளுக்கு இதை செய்யலாம், அதை செய்யலாம்னு சொல்லும் போது சந்தியா எதை பத்தியும் யோசிக்காமல் பார்வதி கல்யாணத்துக்கும் கடையை விரிவுபடுத்தவும் பயன்படுத்தலாம் என சொன்னது ரொம்ப சந்தோஷமா இருந்தது. இந்த குடும்பத்துக்காக யோசிக்கறா என சந்தோஷப்படுகிறார். அவருடைய கணவர் நாளைக்கு போகி பண்டிகையை ரொம்ப சந்தோஷமா கொண்டாடணும் என கூறுகிறார்.

சந்தியாவை பழிவாங்க அர்ச்சனா செய்த வேலை, பதறி போன சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

நாளைக்கு போகியா என கேட்ட சிவகாமி உடனே எல்லோரையும் கூப்பிட்டு பழைய துணி, தேவையில்லாத பொருட்களை கொண்டு வந்து போடுமாறு கூறுகிறார். நாளைக்கு சந்தியாவோட பொருட்களை போட்டு கொளுத்தி சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் என அர்ச்சனா திட்டம் போடுகிறார்.

சந்தியா வெளியே சென்றிருக்க, சிவகாமி சரவணனை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சந்தியா ரூமுக்கு சென்று அவர் படித்த சான்றிதழ்களை தூக்கி வருகிறார். அந்த நேரத்தில் சரவணன் உள்ளே வந்து விட அர்ச்சனா ஒளிந்து கொண்டு அந்த பொருட்களை எடுத்து சென்று விடுகிறார்.

மறுநாள் காலையில் யாருக்கும் தெரியாமல் அந்த பேக்கை கொளுத்த போட்டிருக்கும் பொருட்களுக்கு இடையில் மறைத்து வைத்து விடுகிறார். சிவகாமி சரவணனை கொளுத்த சொல்கிறார். சரவணன் வத்தி குச்சியை பத்த வைத்ததும் ஒரு நிமிஷம் என நிறுத்தி என் பழைய புடவைகளை எடுத்து வந்து போட்டாச்சா என கேட்கிறார். போட்டாச்சு என மயிலு சொல்ல சரி கொளுத்து என கூறுகிறார். மீண்டும் சரவணன் தீக்குச்சியை கொளுத்த சிவகாமி நிறுத்து அது என்னது ஏதோ பெரிய பேக் இருக்கு என கூறுகிறார். உடனே பார்வதி அதை எடுத்து பார்க்க சந்தியாவின் சான்றிதழ்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

சந்தியாவை பழிவாங்க அர்ச்சனா செய்த வேலை, பதறி போன சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

யார் இதை எடுத்து வந்து போட்டது என சிவகாமி கேட்க தெரியலை என எல்லோரும் கூறுகின்றனர். அர்ச்சனா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறுகிறார். சந்தியா இதெல்லாம் உன்னுடையதா? இதெல்லாம் எப்படி இங்க வந்துச்சு என கேட்க எனது தான், ஆனால் எப்படி வந்ததுனு தெரியல என சொல்கிறார்.

பிறகு அதையெல்லாம் பத்திரமாக வைத்து விட்டு கொளுத்துகின்றனர். என்னுடைய ஐஏஎஸ் கனவு ஒரு நாள் நனவாகணும் என சந்தியா வேண்டி கொள்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.