ப்ளைட் டிக்கெட்டை திருடிய பிரச்சனையில் இருந்து தப்பிக்க அர்ச்சனா செந்திலை மயக்க புது திட்டம் போட்டுள்ளார்.

Raja Rani2 Episode Update 29.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சென்னை வந்தடைந்த சந்தியா சரவணன் ரூமிற்கு வந்து பார்த்தபோது என்னங்க இவ்வளவு பெருசா இருக்கு என இருவரும் வியந்து போகின்றனர். நம்ம வீட்ல இருக்க எல்லாரும் வந்தாலே படுத்துத் தூங்கலாம் போல இருக்கு என கூறுகிறார். தூங்கலாம் தான் ஆனால் இந்த ஹோட்டல்ல ஒரு ரூம்ல ரெண்டு பேரும் தங்கணும் என்பதுதான் விதிமுறை என கூறுகிறார்.

சிந்துவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் : ஆறுதலாய் தேற்றுகின்றனர், எனர்ஜி நெட்டிசன்கள்..

பிரச்சினையிலிருந்து தப்பிக்க செந்திலை மயக்க அர்ச்சனா போடும் திட்டம், வருத்தப்படும் சரவணன் - ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்.!!

பெட்ரூம், பாத்ரூம், ஹால் என அனைத்தையும் பார்த்து இருவரும் வியக்கின்றனர். நாம ரெண்டு பேர் மட்டும் தனியா இவ்வளவு பெரிய ரூம்ல இவ்வளவு இயற்கையான சூழலில் இருப்பது மனசுக்கு இதமாக இருக்கிறது என கூறுகிறார். உங்களுக்கு அப்படி எதுவும் தோனலையா என சந்தியா சரவணனிடம் கேட்க அவர் எனக்கு தோணுது ஆனா அப்பா அம்மாவும் வந்து இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்க. அப்பா ரொம்ப ஆசையாசையாய் இருந்தார் என கூறுகிறார். பிறகு போன்ல பேசுறீங்களா என கேட்டு போன் செய்து கொடுக்கிறார். சிவகாமி பத்திரமா போய்ட்டு வந்துட்டீங்களா என கேட்கிறார். அவ குடுக்கிற சாப்பாட்டை மட்டும் சாப்பிடுங்க வெளியில் எதுவும் வாங்கி சாப்பிடாதீர்கள் என சொல்கிறார். அதன்பிறகு அவருடைய அப்பா பேசுகிறார். சரவணன் இங்க கொடுத்திருக்க ரூம் மிக பிரம்மாண்டமாய் இருக்கு. ‌ சினிமால காட்டுற மாதிரி குளிக்க தொட்டி எல்லாம் இருக்கு என கூறுகிறார். அதுலயே குளி சரவணனா இந்த மாதிரி வாய்ப்பு நமக்கு எப்போ திரும்ப கிடைக்கும் என கூறுகிறார்.

பிறகு சந்தியா குளிக்கச் செல்ல சரவணன் தவறுதலாக ஏசி ரிமோட்டை ஆன் செய்து விடுகிறார். அதனை ஆப் செய்ய தெரியாமல் அதிகமாக்கி விடுகிறார். சந்தியா வருவதற்குள் ரூம் அதிக கூலாகி குளிரில் நடுங்குகிறார் சரவணன். பிறகு சந்தியா வந்து ஏசியை ஆப் செய்ய கற்றுத் தருவதாக கூறுகிறார். சரவணன் முதலில் ஆஃப் பண்ணுங்க அப்புறம் கற்றுத் தாங்க என ஆப் செய்து விடுகிறார். இருவருக்கும் இடையே இந்த பக்கம் கமெண்ட்ஸ் நடக்க அந்தப்பக்கம் அர்ச்சனா செந்தில் ஒருத்தர் தான் தன்னுடைய தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்திருக்கிறார்.

பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away | RIP

பிரச்சினையிலிருந்து தப்பிக்க செந்திலை மயக்க அர்ச்சனா போடும் திட்டம், வருத்தப்படும் சரவணன் - ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்.!!

அவரிடமிருந்து தப்பிக்க அவரை மயக்கி ஆகவேண்டும் என திட்டம் போட்டு மாடர்ன் உடை ஒன்றை கையில் எடுத்து வந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இத போட்டா மனுஷன் ஆஃப் ஆகிடுவார். அப்புறம் நாம சொல்றது எல்லாம் கேட்டு பாரு என்ன திட்டம் போடுகிறார். இந்த நேரத்தில் மயிலு உள்ளே வந்து விட டிரஸ்ஸை மறைக்க ஆனாலும் கண்டுபிடித்து விடுகிறார். யாருக்கு இது பார்வதிக்கா எனக் கேட்க நான் எதுக்கு அவளுக்கு கொடுக்கணும். நான்தான் போட்டுக்கப் போறேன் என சொல்ல மயிலு நீங்க போட்டுக்கிட்டீங்கன்னா சூப்பரா இருக்கும். செந்தில் ஐயாவுக்கு உங்களுக்கு ஜோடிப் பொருத்தம் சரியாக இருக்கும் என சொல்லிவிட்டு போகிறார்.

இந்தப் பக்கம் சந்தியா சரவணன் இருவரும் பேசிக்கொண்டே சரவணனின் குளிரை போக்க சந்தியா கைகளை தேய்த்து அவருக்கு சூடுயேற்றுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.