பார்வதி கல்யாணத்துக்காக கோயிலுக்கு போன இடத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Raja Rani2 Episode Update 26.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பார்வதி கல்யாண பத்திரிக்கை வைத்து பூஜை செய்ய குடும்பத்தார் கோவிலுக்கு சென்று உள்ளனர். அப்போது விக்கி பார்வதிக்கு போன் செய்ய பதற்றத்துடன் போனை எடுக்கிறார் பார்வதி. ஒருநாள் தன்னுடன் தங்க வேண்டும் என மீண்டும் பார்வதியை மிரட்டுகிறார் விக்கி. இல்லையென்றால் போட்டோக்களை உன் பாஸ்கரின் அம்மாவிடம் காட்டி விடுவேன் என மிரட்டுகிறார். பிறகு சந்தியா என்ன ஏது என கேட்க எதுவும் சொல்லாமல் பாரதி மறைத்து விடுகிறார்.

பார்வதி கல்யாணத்துக்காக கோவிலுக்கு போன இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி, மயங்கி விழுந்த சிவகாமி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும்போது பெண்மணி ஒருவருக்கு சாமி வந்து உன் குடும்பத்திற்கு நிறைய கண் திருஸ்டி இருக்கு யாரும் நீ சொல் பேச்சு கேட்பது இல்லை. பெரிய பிரச்சனை வரப் போகுது. உன் பூர்வ ஜென்ம புண்ணியம் தான் உங்களைக் காக்கும் என்னை மட்டும் நம்பு என கூறுகிறது.

இதனால் பார்வதி அர்ச்சனா என அனைவரும் வருகின்றனர். சிவகாமி கண்கலங்கி அழுது மயங்கி விழுகிறார். பிறகு வீட்டுக்கு வந்ததும் சந்தியா எல்லோருக்கும் ஆறுதல் சொல்ல அர்ச்சனா எனக்கு என்னவோ அந்த பெண்மணி சாமியாடி சொன்னது நடந்ததுடுமோனு தோணுது என கூறுகிறார். சிவகாமி பார்வதி தைரியமான பொண்ணு அப்படித்தான் நான் வளர்த்து இருக்கேன் என கூறுகிறார்.

பிறகு சிவகாமியின் அவருடைய கணவரும் கல்யாணத்துக்கு என்னென்ன தேவை எவ்வளவு செலவு இருக்கு என கணக்குப் போட்டு இண்டிகேட்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என சொல்ல சரவணன் 4 லட்சம் ரூபாய் கொடுத்து விடுகிறேன். மீதியை புரட்டி விடலாம் என சொல்கிறார். உடனே செந்தில் 5 லட்சம் தரேன் என் தங்கச்சிக்கு செய்யாமல் வேற யாருக்கு செய்யப் போகிறேன் என கூறுகிறார். அர்ச்சனா ஏன் இப்படி காச வாரி இறைக்கறீங்க என சொல்ல செந்தில் அவரை திட்டி விடுகிறார்.

பார்வதி கல்யாணத்துக்காக கோவிலுக்கு போன இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி, மயங்கி விழுந்த சிவகாமி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு சரவணனின் அப்பா சொத்து பணத்தை சேர்க்கல ஆனால் ரெண்டு மாணிக்கத்தை சேர்த்து வைத்திருக்கிறேன் என கண் கலங்குகிறார். சிவகாமி இந்த நிமிஷம் எங்க உண்மை போனாலும் கவலை இல்லை இந்த குடும்பத்தை நீங்க பாத்துப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த கல்யாணத்த நல்ல படியா நடத்திடுவேனு எனக்கு தைரியம் வந்துடிச்சி என கூறுகிறார். பிறகு மறுநாள் காலையில் எல்லோரும் துணிக் கடைக்குச் செல்ல பார்வதியை தனியாக அழைத்துச் சென்று அவரை மிரட்டுகிறார் விக்கி. தயவுசெய்து இங்கிருந்து போய்விடு என கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறார் பார்வதி. இந்த நேரத்தில் சிவகாமி பார்வதி யாரையோ பார்த்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கே வருகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.