அர்ச்சனா செய்த வேலையை சரவணனிடம் போட்டுக் கொடுத்துள்ளார் சல்மா.

Raja Rani2 Episode Update 19.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. ஷல்மா வழுக்கி விழுந்த நிலையில் அதற்கு காரணம் அர்ச்சனா தான் என்பது தெளிவாக தெரிகிறது. இதனை அறிந்து கொண்ட ஷல்மா அர்ச்சனா மீது பயங்கர கோபப்படுகிறார். பிறகு சரவணனை தனியாக சந்தித்து உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என போட்டியில் சரவணனை தோற்க்க வைக்க சல்மா செய்த வேலைகளையும் அதற்கு அர்ச்சனா துணை போனதையும் செல்கிறார். ‌‌

அர்ச்சனா செய்த வேலையை சரவணனிடம் போட்டுக் கொடுத்த ஷல்மா.. சந்தியா எடுக்க போகும் அதிரடி முடிவு - ராஜா ராணி 2 சீரியல்  எபிசோட் அப்டேட்

இந்த மாதிரி வேலையெல்லாம் அர்ச்சனா தான் செய்வார் என தெரியும். ஆனா இதெல்லாம் இது புரியாம பண்ணிக்கிட்டு இருக்கா. என்கிட்டே சொன்னதை வீட்ல வேற யார்கிட்டயும் சொல்லிடாதிங்க என சரவணன் கூறுகிறார். சரவணனும் ஷர்மாவும் பேசிக்கொண்டிருப்பதை அர்ச்சனா பார்த்து பதற்றம் அடைகிறார். பிறகு ஹேனா மற்றும் ஷல்மா இங்கிருந்து ஊருக்கு கிளம்பி விடுகின்றனர். சந்தியா சரவணன் ஒரு மாதிரியாக இருப்பதை பார்த்து என்ன ஏதென விசாரிக்க நடந்ததை கூறுகிறார். சந்தியா இது எல்லாம் எனக்கும் தெரியும். அதனால்தான் போட்டியில் அர்ச்சனாவை உங்கள் பக்கம் வராமல் பார்த்துக் கொண்டேன் என கூறுகிறார். அதன்பிறகு இதுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என சந்தியா முடிவு செய்கிறார்.

பிறகு சரவணன் அர்ச்சனாவை பார்த்து சிரித்து விட்டதால் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று அர்ச்சனா நினைத்துக் கொள்கிறார். அதன் பிறகு வீட்டுக்கு வந்ததும் ஆதி 5 லட்சம் ரூபாய் பணத்தை பற்றி கிளர ஆளாளுக்கு ஒரு ஐடியா சொல்கின்றனர். கொஞ்ச நாளைக்கு எது சரவணன் பெயரிலேயே இருக்கட்டும் பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம் என சிவகாமி சொல்லிவிடுகிறார்.

சந்தியா நான் ஐடியா சொல்லட்டுமா என கூறுகிறார். ‌ நம்ம வீட்டுல அடுத்த பெரிய செலவு பார்வதி கல்யாணம் தான். அதனால அவளுடைய கல்யாணத்திற்கு கொஞ்சம் பணம் எடுத்து வைத்து விடுவோம். மீதி இருக்கும் பணத்தில் 2 கடையையும் கொஞ்சம் விரிவுபடுத்தலாம். வருமானமும் அதிகரிக்கும் என சொல்கிறார். ‌‌

அர்ச்சனா செய்த வேலையை சரவணனிடம் போட்டுக் கொடுத்த ஷல்மா.. சந்தியா எடுக்க போகும் அதிரடி முடிவு - ராஜா ராணி 2 சீரியல்  எபிசோட் அப்டேட்

சந்தியா சொன்ன ஐடியா தான் சரி என சரவணனும் கூறுகிறார். சிவகாமி சரி என சொல்லி விடுகிறார். பிறகு செந்தில் அர்ச்சனா செய்வது சரியில்லை அவளுடைய போக்கு தப்பாக இருக்கிறது என ‌‌ சரவணனிடம் சொல்கிறார். சின்ன பொண்ணு தானே போக போக சரியாகிடும் என சரவணன் கூறுகிறார். இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அர்ச்சனா அதன்பிறகு சென்றுவிடும் ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க என்ன பத்தி ஏதாவது போட்டுக் கொடுத்தாரா என கேட்கிறார். உன்ன பத்தி போட்டுக்கொடுக்க நீ என்ன தப்பு பண்ண என செந்தில் கேட்க உடனே அர்ச்சனா மழுப்பி விடுகிறார்.

சவுண்ட் அதிகமா இருக்கே இவரை அடுக்கி வைக்கணும் என அர்ச்சனா மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.