சுற்றி பார்க்கப்போன இடத்தில் சந்தியாவை பழிவாங்க திட்டம் போட்டு சிக்கியுள்ளார் அர்ச்சனா.

Raja Rani2 Episode Update 18.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. குடும்பத்தோடு அனைவரும் தென்காசியை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டனர். வண்டியில் போகும்போது சிவகாமியின் கணவர் சிவகாமியின் மீது விழுகிறார். சந்தியாவின் சரவணனும் ஜாலியாக பேசி வருவதை பார்த்த அர்ச்சனா இவங்களுக்கு எங்க போனாலும் ரொமான்ஸ் மட்டும் குறைய மாட்டேங்குது. ஹனிமூன் போறதா நெனப்பு என கூறுகிறார்.

சுற்றிப் பார்க்கப் போன இடத்தில் சந்தியாவை பழிவாங்க திட்டம்போட்டு சிக்கிய அர்ச்சனா.. ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதைப்போல் பார்வதியும் பாஸ்கரும் ஒரே சீட்டில் அமர்ந்ததை பார்த்து வயிறு எறிகிறார் அர்ச்சனா. பாஸ்கருக்கு என் தங்கச்சியோட தான் கல்யாணம் நடக்கும் என மனதுக்குள் கூறுகிறார்.

பல இடங்களை சுற்றிப் பார்த்த குடும்பத்தார் கடைசியாக கோவில் ஒன்றிற்கு வருகின்றனர். சிவகாமிக்கு மிகவும் பிடித்த கோவில் என கூறுகின்றனர். பிறகு கோவிலுக்கு சென்ற பிறகு ஷல்மாவும் ஹோனாவும் நீங்க சொன்னது போலவே இந்த கோவில் ரொம்ப அழகா இருக்கே என கூறுகின்றனர்.

பிறகு அவர்கள் போட்டோ எடுக்க செல்கின்றனர். அவர்களுடன் சந்தியாவும் சரவணனும் சென்று போட்டோ எடுக்கின்றனர். ‌‌ பார்வதியும் பாஸ்கரும் தனியாகச் சென்று பேசுகின்றனர். இவர்கள் இருவரும் ஓடி ஆடி விளையாடும் அதைப்பார்த்த அர்ச்சனா செந்திலிடம் இங்க பாருங்க பார்வதி பண்ற வேலைய என கூறுகிறார். உடனே சென்று கோபமாகி அர்ச்சனாவை திட்டி விட்டு அங்கிருந்து வந்து விடுகிறார்.

பிறகு சிவகாமி இந்த கோவிலின் பூசாரி பிள்ளையாருக்கு குளத்திலிருந்து மூன்று குடம் தண்ணீர் எடுத்து ஊற்றி விட்டு போகுமாறு சொன்னார் என கூறுகிறார். உடனே சந்தியாவும் சரவணனும் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுகின்றனர். இதுதான் சந்தர்ப்பம் என அர்ச்சனா படிக்கட்டில் எண்ணெயை ஊற்றி விடுகிறார். ‌‌

இரண்டு முறை சந்தியா எண்ணெயில் கால் வைக்காமல் தப்பி விடுகிறார். மூன்றாவது குடத்தை நான் ஊற்றுகிறேன் என ஷல்மா கூறுகிறார். பிறகு சிவகாமியிடம் இது குறித்து கேட்க தண்ணீர் எடுத்து குளத்திற்கு மேலே கொண்டு வந்து சந்தியா சரவணனிடம் கொடுத்துவிடு என கூறுகிறார். சல்மாவின் தண்ணீர் எடுத்து வரும்போது அவர் எண்ணெய் மீது கால் வைக்க வழுக்கி விடுகிறது. பிறகு அவரை மேலே அழைத்து வந்து உட்கார வைத்து காலில் மசாஜ் செய்கின்றனர்.

சுற்றிப் பார்க்கப் போன இடத்தில் சந்தியாவை பழிவாங்க திட்டம்போட்டு சிக்கிய அர்ச்சனா.. ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அர்ச்சனா கையில் எண்ணெய் பாட்டிலை மறைப்பதை பார்த்துவிடுகிறார் ஷல்மா. அர்ச்சனா திரு திருவென முழிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.