மீண்டும் வீட்டைத் தேடி போலீஸ் வர அதிர்ச்சியாகியுள்ளார் சந்தியா.

Raja Rani2 Episode Update 17.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சிவகாமியும் அவருடைய கணவரும் வீட்டிற்கு விருந்தாளியாக வந்துள்ள ஆஹேனா மற்றும் ஷல்மா ஆகியோருக்கு வீடு வசதியாக இருக்கிறதா எனப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சிவகாமியின் பத்து வார்த்தை பேசினா அதுல 8 வார்த்தை இங்கிலீஷ் தான் பேசுறாங்க எனக்கு ஒன்னும் புரியல என கூறுகிறார்.

மீண்டும் வீட்டைத் தேடி வந்த போலீஸ்.. அதிர்ச்சியான சிவகாமி, சந்தியா போடும் திட்டம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்த நேரத்தில் பார்வதியும் ஆதியும் அந்தம் வரை இவங்களையும் தான் பணம் கட்டி காலேஜ் எல்லாம் படிக்க வைத்து ஒரு நாளாவது இங்கிலீஷ்ல பேசி இருக்காங்களா? சந்தியா அந்த ரெண்டு பிள்ளைங்க எப்படி இங்கிலீஷ்ல பேசுறாங்க பாருங்கள் என கூறுகிறார்.

இந்த நேரத்தில் ஹேனா மற்றும் ஷல்மா ஆகியோர் இங்கே வர அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் போலீஸ் வருகிறது. இவர்களைப் பார்த்து சிவகாமி அதிர்ச்சி அடைகிறார். பிறகு உள்ளே வந்த போலீஸ் சரவணன் சமையல் போட்டியில் ஜெயித்ததால் அவருக்கு ஐஜி வாழ்த்து சொல்லி விட்டு வரச் சொன்னதாக கூறுகின்றனர். மேலும் சார் சரவணனிடம் பேச வேண்டும் என சொன்னார் அவர் இல்லையா எனக் கேட்க சந்தியா அவர் கடைக்கு சென்று இருக்கிறார் என்று சொல்லிவிட்டு நீங்க போன் போட்டு குடுங்க நான் கொண்டு போய் தருகிறேன் என கூறுகிறார்.

பிறகு சந்தியா சரவணனிடம் போனில் இழுத்துக் கொண்டு போய் கொடுக்க போலீஸ் அதிகாரி சரவணனை பாராட்டுகிறார். அதன் பின்னர் வீட்டில் சிவகாமி எல்லாம் பக்கத்துலதான் இருக்கு ஆனா நாம எங்கே போனது இல்லை எனது கணவரிடம் சொல்லி புலம்புகிறார். அவங்களோட நாம் உடன் சுற்றிபார்க்க போகலாம் என சொல்ல பிறகு மறு நாள் எல்லோரும் சுற்றிப்பார்க்க கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் வீட்டைத் தேடி வந்த போலீஸ்.. அதிர்ச்சியான சிவகாமி, சந்தியா போடும் திட்டம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்

ரூமில் சந்தியாவும் சரவணன் எனக்கு நீங்க டிரஸ் சூஸ் பண்ணுங்க உனக்கு நான் டிரஸ் சூஸ் பண்றேன் என மாறி மாறி உடைகளை தேர்ந்தெடுக்கின்றனர். கடைசியில் இருவரும் ஒரே கலரில் உடைகளை எடுத்து ஆச்சரியப்படுத்துகின்றனர். பிறகு எல்லோரும் கிளம்பி தயாராக இருக்க அப்போது சிவகாமி ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்த ஹேனா மற்றும் ஷல்மா சிரிக்கின்றனர். எதுக்கு சிரிக்கிறீங்க என கேட்க இந்த குடும்பத்தின் மேல் நீங்க எவ்வளவு அக்கறை வச்சிருக்கீங்களே பார்த்து சந்தோஷமா இருக்கு என கூறுகிறார். அம்மா எப்பவுமே அப்படித்தான் என சரவணன் சொல்கிறார். பிறகு அனைவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்ப அந்த நேரத்தில் பாஸ்கர் வருகிறார். பிறகு அவரையும் அழைத்துக்கொண்டு குடும்பமாக சுற்றிப்பார்க்க கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.