சரவணன் வீட்டிற்கு புதிதாக கெஸ்ட் வர அவர்களைப் பார்த்து அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார் அர்ச்சனா.

Raja Rani2 Episode Update 12.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் அர்ச்சனா செய்ததை நினைத்து குழப்பத்தில் இருக்க இதனை பார்த்த சந்தியா நான் நினைச்சது சரிதான் அவர் எதோ குழப்பத்தில் இருக்கிறார் என புரிந்து கொள்கிறார். இதுகுறித்து சரவணனிடம் கேட்க அர்ச்சனா பற்றி எதையும் சொல்லாமல் எதை எதையோ கூறி மழுப்பி சந்தியாவை நம்ப வைத்து விடுகிறார்.

சரவணன் வீட்டுக்கு வந்த புது கெஸ்ட்.. அதிர்ச்சியில் ஆடிப்போன அர்ச்சனா, உச்சக்கட்ட கோபத்தில் செந்தில் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் அர்ச்சனா தன்னுடைய கணவர் இரண்டு மாதத்திற்கான தங்களுடைய பங்கை சிவகாமியிடம் கொடுத்ததால் கடும் கோபத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் செந்தில் ரூமிற்குள் வர அவரிடம் சத்தம் போடுகிறார் அர்ச்சனா. உடனே கடுப்பான செந்தில் எல்லாத்துக்கும் நீதான் காரணம், சரவணன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றேன். அவன் பாவம் எங்களுக்காக சின்ன வயசுல இருந்தே கஷ்டப்படுகிறான். நானும் அவன் கடை இல்ல வேலைக்கு வந்திடுவேன் சொன்னதுக்கு ரெண்டு பேரும் ஒரே கடையில் இருந்தால் நன்றாக இருக்காது என சொல்லி ஜவுளி கடை வைத்துக் கொடுத்தது அவன் தான். நீ இந்த வீட்டுக்கு புதுசா உனக்கு அவனப் பத்தி தெரியாது ஆனா நான் எப்படி இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டேன் நினைக்கும்போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என கோபப்படுகிறார். இதனால் அர்ச்சனாவின் சத்தம் அடங்கி விடுகிறது.

சரவணன் வீட்டுக்கு வந்த புது கெஸ்ட்.. அதிர்ச்சியில் ஆடிப்போன அர்ச்சனா, உச்சக்கட்ட கோபத்தில் செந்தில் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் ஆதியின் நண்பர் போன் செய்து கோவாவுக்கு பிளான் பண்ணிருக்கோம் வரைய ஒரு ஆளுக்கு முப்பது ஆயிரம் என கூறுகிறார். 30 ஆயிரம் வீட்ல சொல்லி சமாளிக்க முடியாது என ஆதி கூறுகிறார். பிறகு அனைவரும் வீட்டில் இருக்க அப்போது சமையல் போட்டியில் கலந்துகொண்ட ஹேனா யூடியூப் லைவோடு வீட்டிற்குள் நுழைகிறார். அவரை வரவேற்ற குடும்பத்தார் நலம் விசாரிக்கின்றனர். பிறகு மயிலை அறிமுகப்படுத்திவிட்டு அவருக்கு டீ கொண்டுவர சொல்கிறார். ஒரு டீ வேண்டாம் ரெடியா கொண்டுவாங்க இன்னொருத்தர் இருக்கிறார் என சொல்லிவிட்டு அவர் வெளியே சென்று சல்மாவை அழைத்து வருகிறார்.

சல்மாவை பார்த்ததும் அர்ச்சனா கடும் அதிர்ச்சி அடைகிறார். உள்ள வா ன்னு கூப்பிட மாட்டீங்களா என சல்மா சொல்ல சந்தியா வாங்க நீங்க வந்த சந்தோஷத்தில் மறந்திட்டேன் என சொல்லி அவரை உள்ளே அழைத்து உபசரிக்கிறார். பிறகு சரவணனைப் பற்றி சிவகாமி அவர்களிடம் பேச சரவணனை அவர்களும் பாராட்டுகின்றனர். அதன் பிறகு சிவகாமி இவர்களுக்கு சாப்பாடு பரிமாற மசாலா குறித்த டிப்ஸ்களை கேட்கிறார் சல்மா. இதையெல்லாம் கேட்ட ஹேனா ஒரு என்னோட யூடியூப் சேனல்ல உங்களை வைத்து ஒரு வீடியோ போடுகிறேன் என கூறுகிறார். சிவகாமி அதெல்லாம் வேண்டாம் என கூச்சப்பட சந்தியா அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தை நீங்க நார்மலா பேசுற மாதிரி பேசுங்க என அவரை ஊக்கப்படுத்துகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது. ‌‌