அர்ச்சனாவை செந்தில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் உண்மையை உடைத்துள்ளார்.

Raja Rani2 Episode Update 10.02.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அர்ச்சனா செய்த தவறுகள் அனைத்தும் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில் இனி இவளோடு வாழ மாட்டேன் என செந்தில் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.

வெளியே தள்ளிய செந்தில்.. கர்ப்பமாக இருக்கும் உண்மையை உடைத்த அர்ச்சனா, சந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அர்ச்சனா சிவகாமி அவருடைய கணவர் சேர்ந்து என ஒவ்வொருவரிடமும் கெஞ்சுகிறார். இனி எந்த தப்பும் செய்யமாட்டேன் என சொல்லி அழுகிறார். யாரும் எதையும் காதில் வாங்காத காரணத்தினால் இப்போதைக்கு கர்ப்பமாக இருக்கும் உண்மையை சொல்வது தான் சரி என முடிவெடுத்து என்னை என்ன வேணாலும் பண்ணுங்க ஆனா என் வயித்துல வளர்ற குழந்தையை தண்டித்து விடாதீர்கள் என கூறுகிறார்.

செந்தில் என்ன சொன்ன என திரும்ப கேட்க ஆமா நான் கர்ப்பமாக இருக்கிறேன் இந்த வீட்டோட வாரிசு என் வயித்துல வளருது என கூறுகிறார். திரும்பவும் பொய் சொல்றியா என செந்தில் சிவகாமி என இருவரும் கேட்கின்றனர். பார்வதியின் அது எப்படி என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பும்போது குழந்தை வந்துடுச்சு என கேட்கிறார். சந்தியா அர்ச்சனா சொல்றது உண்மை மாதிரி இருக்கு என சொல்லியும் கேட்கவில்லை. நீங்க எந்த ஆஸ்பிட்டலுக்கு வேணாலும் கூட்டிட்டு போயிட்டு பண்ணுங்க நான் சொல்றது உண்மைதான்.

நான் கர்ப்பமாக கூடாதுன்னு மாத்திரை போட்டது எல்லாம் உண்மைதான் ஆனா நீங்க திட்டுனதுக்கு அப்புறம் அதை நான் நிறுத்திட்டேன் என அர்ச்சனா கூறுகிறார். செந்தில் அப்போதும் அர்ச்சனாவை உள்ளே சேர்த்துக்கொள்ள சம்மதிக்கவில்லை. நான் சொல்றது உண்மை தாங்க என அர்ச்சனா செந்திலிடம் போக அவர் பிடித்து தள்ள மயங்கி விழுகிறார் அர்ச்சனா.

வெளியே தள்ளிய செந்தில்.. கர்ப்பமாக இருக்கும் உண்மையை உடைத்த அர்ச்சனா, சந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு அர்ச்சனாவை உள்ளே தூக்கி செல்கின்றனர். நாட்டு வைத்தியம் செய்யும் பாட்டி ஒருவரை அழைத்து அர்ச்சனாவை பரிசோதனை செய்ய அவர் கர்ப்பமாக இருப்பது உண்மை என தெரிகிறது. பிறகு அர்ச்சனா ஒவ்வொருவரின் கால்ல விழுந்து நான் செஞ்சது தப்புதான் இனி நல்லபடியா இருக்கேன் என கெஞ்சுகிறார். செந்தில் இவ கர்ப்பமாக இருந்தால் என்ன இவளோட இனிமே என்னால சேர்ந்து வாழ முடியாது என கூறுகிறார். கூட்டிட்டு வந்தா உங்க பொண்ணு என செந்தில் சத்தம் போடுகிறார்.

இனிமே உங்களால் என்ன பண்ண முடியும் ஆண்டவன் விட்ட வழி ஆகட்டும் என அர்ச்சனாவை அவருடைய அப்பா அம்மா வெளியே கிளம்புகின்றனர். உடனே சிவகாமி நில்லுங்க. அவ வயித்துல ஒரு உயிர் வளருது இந்த நேரத்துல அவ எங்கேயும் போகத் தேவையில்லை இங்கேயே இருக்கட்டும் என சொல்கிறார். செந்தில் என்னம்மா சொல்றீங்க இவளோடு என்னால திரும்பவும் சேர்ந்து வாழ முடியாது என கூறுகிறார்.

வேணும்னா இவர் குழந்தையைப் பெற்று தளபதிக்கும் இந்த வீட்டில இருக்கட்டும் அதுக்கப்புறம் ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்கக்கூடாது பெட்டிய தூக்கிட்டு கிளம்பிடனும் என கூறுகிறார். இதுக்கு சம்மதம்னா இங்க இருக்க சொல்லுங்க இல்லனா கிளம்பி போக சொல்லுங்க என செந்தில் சொல்கிறார்.

அதன்பிறகு அர்ச்சனாவின் அப்பா அம்மா நீங்க இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெரிய விஷயம் நாங்க இதுக்கு சம்பாதிக்கிறோம் என கூறுகின்றனர்‌. அதன்பிறகு அர்ச்சனாவும் நானும் சம்பாதிக்கிறேன் என கூறுகிறார். பிறகு அர்ச்சனாவின் அப்பா அம்மா நல்லபடியா இருந்துக்கோ என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர்.

பிறகு எல்லோரும் உள்ளே சென்றுவிட சந்தியா மட்டும் அர்ச்சனாவிடம் ஆறுதல் கூறுகிறார். சரவணன் சந்தியாவை கூப்பிட அவரும் உள்ளே சென்று விடுகிறார். சந்தியா என்ன இவ்வளவு பேர் முன்னாடி அசிங்கப்பட வச்சுட்ட. எனக்கு அந்த வெளிய வரத்துக்கு உள்ள உன்னை இந்த வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் விடமாட்டேன். இது சத்தியம் என அர்ச்சனா சபதம் எடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.