சிவகாமி பணம் கேட்க சரவணனின் முகம் மாறிவிட்டது.

Raja Rani2 Episode Update 10.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் போட்டோ பேப்பரில் வந்து இருப்பதை பார்த்து கடையில் இருந்து செல்வம் பேப்பரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வருகிறார். அதன்பிறகு அக்கம்பக்கத்தார் இருவர் வந்து சரவணனுக்கு நம்ம ஏரியாவில் பாராட்டு விழா நடத்த இருப்பதாக கூறுகின்றனர். இதனைக் கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

பணம் கேட்கும் சிவகாமி, முகம் மாறிய சரவணன், அப்பாவை அசிங்கப்படுத்திய ஆதி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு ரூமில் சந்தியா பேப்பரில் செய்தியை படித்துக்கொண்டு மகிழ்ச்சி அடைகிறார். சரவணன் அங்கு வர அவரை கண்ணை மூட சொல்லி விட்டு அவருக்கு ஒரு கிப்ட் கொடுக்கிறார். அதனைப் பிரித்துப் பார்த்தால் பேப்பரில் வந்த செய்தியை போட்டோ வைக்க பிரேம் போட்டு கொடுத்துள்ளார். பிறகு சரவணன் உங்களுக்கும் ஒரு கிப்ட் வைத்திருக்கும் எனச்சொல்லி அவர் ஒரு கிப்ட்டை எடுத்து வருகிறார். சந்தியா அதனைப் பிரித்துப் பார்க்க அவர் காலேஜில் முதலிடம் பெற்று பட்டம் வாங்கிய போட்டோவை ப்ரேம் போட்டு கொடுத்துள்ளார். சந்தியா கண்கலங்க அவரை சமாதானம் செய்கிறார் சரவணன்.

அதன்பிறகு சரவணனின் அப்பா வெளியில் அமர்ந்து சேவ் செய்து கொண்டிருக்க அந்த நேரத்தில் ஆதி வேலைக்கு கிளம்புகிறார். நீயும் ஏதாவது சாதிச்சு பேப்பர்ல பேரு வர மாதிரி பெருமை தேடித் தா டா என கூறுகிறார். ஆதி வாழ்க்கையின் என்னை பொருத்தவரைக்கும் இது தான் என ஒரு தத்துவத்தை கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். மீண்டும் அவரை தடுத்து நிறுத்திய அவரது அப்பா செலவுக்கு பணம் இல்ல ஒரு நூறு ரூபா கொடுத்துட்டு போடா என கேட்கிறார். ஆனால் ஆதி பணம் கொடுக்காமல் வெட்டியா ஒக்காந்து தரையை தேச்சிட்டு இருக்கீங்களே இப்படி கைநீட்டி காசு கேட்க தான் இப்படி பேசினீங்களா? ‌‌ பெருமை சேர்த்த உங்க பையன் கிட்ட போய் கேளுங்கள் என கூறுகிறார்.

பணம் கேட்கும் சிவகாமி, முகம் மாறிய சரவணன், அப்பாவை அசிங்கப்படுத்திய ஆதி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

இதனை மறைந்து நின்று பார்த்த சரவணன் அதன் பிறகு அப்பாவின் சட்டையில் அவருக்கு தெரியாமல் பணம் வைக்கிறார். இதனை அவரது அப்பா பார்த்துவிட்டு எதுக்குடா பணம் என கேட்க இனிமே பணம் வேணும்னா என்கிட்ட மட்டும் கேளுங்க என கூறுகிறார். ஆதி ஏம்பா இப்படி இருக்கான் என திட்டுகிறார் சரவணன். இதையெல்லாம் மனசுல வச்சுக்காத அவன் போக போக சரியாகி விடுவான் என கூறுகிறார். இதையெல்லாம் தூரத்தில் நின்று பார்த்த சிவகாமி அதன்பிறகு ரூமுக்கு வந்து என்ன ரெண்டு பேரும் பேசிட்டு இருந்திங்க என கேட்கிறார். அப்பா பையனுக்கு இடையில எனவே பேசிப்போம் உனக்கு என்ன என அவருடைய கணவர் சமாளித்து விடுகிறார்.

பிறகு மறுநாள் காலையில் சிவகாமி வீட்டில் மளிகை சாமான் எதுவுமில்லை சரவணனிடம் பணம் கேட்க வேண்டும் என சரவணனை அழைத்து பணம் கேட்கிறார். உடனே சரவணனின் முகம் மாறுகிறது. சிவகாமி பணம் இல்லையா எனக் கேட்க இல்லம்மா கடையில் இருக்கு சாயங்காலம் கொடுக்கிறேன் என கூறி விடுகிறார். சரவணனின் முகம் மாறியதை பார்த்த சந்தியா ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறார். இதுதான் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.