இறுதி போட்டியில் கேப்பங் களியை சமைத்த சரவணனனுக்கு வெளிநாட்டு நடுவர் கொடுத்த கமெண்ட் என்ன என்பதை பார்க்கலாம்.

Raja Rani2 Episode Update 04.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இறுதிப்போட்டியில் சரவணன் மண் பாண்டங்களை வைத்து சமைப்பதை பார்த்து குடும்பத்தாரும் நடுவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சரவணன் எதுக்கு இறுதிப்போட்டியில் இப்படி செய்து கொண்டிருக்கிறார் என நடுவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

இறுதிப்போட்டியில் கேப்பங் களியை சமைத்த சரவணன்.. வெளிநாட்டு நடுவர் கொடுத்த ரியாக்சன் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

தொகுப்பாளர் ஒவ்வொருவரிடமும் சென்று என்ன செய்கிறீர்கள் என கேட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் சரவணனிடம் என்ன சாப்பிடுகிறீர்கள் என கேட்க கேப்பங் களி, கூழ் என கூறினார். அதன் பின்னர் போட்டியாளர்கள் சமைக்கும் நேரம் முடிந்த பின்னர் அதனை டெக்கரேட் செய்ய ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.

பிறகு நடுவர்கள் ஒவ்வொரு போட்டியாளர் இடமும் சென்று அவர்கள் சமைத்ததை சாப்பிட்டு பார்த்து கமெண்ட் சொல்ல ஆரம்பித்தனர். முதலில் ஷல்மா சமைத்ததை பார்த்த நடுவர்கள் டேஸ்ட் நல்லா இருக்கு என பாராட்டினார். பிறகு ஹேனா சமைத்ததை சாப்பிட்டு பார்த்து அதை விட சூப்பராக இருப்பதாக பாராட்டினார்கள்.

இறுதியில் சரவணன் அமைத்திருப்பதை டேஸ்ட் செய்ய நடுவர்கள் வந்தனர். அப்போது பெண் நடுவர் ஏன் இப்படி சமைச்சு இருக்கீங்க. இதெல்லாம் ஜனங்க பசியால கஷ்டப்பட்ட போது சாப்பிட்ட உணவு. அவர் வெளிநாட்டில் இருந்து வந்திருக்க ஜட்ஜ் அவர் போய் இதை எப்படி சாப்பிடுவாரு? என சொல்ல சரவணன் முதலில் சாப்பிட்டு பார்த்து விட்டு அதன் பிறகு கமெண்ட்ஸ் சொல்லுங்க என கூறுகிறார்.

இறுதிப்போட்டியில் கேப்பங் களியை சமைத்த சரவணன்.. வெளிநாட்டு நடுவர் கொடுத்த ரியாக்சன் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு வெளிநாட்டு நடுவர் என்ன சொல்கிறார் எனக் கேட்க மற்ற நடிகர்கள் டேஸ்ட் பார்த்து விட்டு கமெண்ட் சொல்லுங்கள் என சொல்வதாக கூறுகின்றனர். பிறகு சரவணன் அவருக்கு கேப்பங் களி கொடுக்க அதனை சாப்பிட்டு பார்த்த வேற லெவல் டேஸ்ட் என பாராட்டினார். அதன்பிறகு கூழ் குடித்து விட்டு இந்த மாதிரி உணவை வேறு எங்கேயும் சாப்பிட்டதே கிடையாது என பாராட்டினார்.

அர்ச்சனா இதெல்லாம் வேலைக்காவாது அவர் போய் இதை எப்படி சாப்பிடுவார் என சொல்லிக் கொண்டிருந்த நிலையில் நடுவர் பெரிய அளவில் பாராட்டியது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. வெளிநாட்டு நடுவர் சரவணன் சமைத்ததை திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கி சாப்பிட்டார். பிறகு நடுவர்கள் மேடைக்கு சென்று போட்டியாளர்களை வர வைத்து அவர்கள் சமைத்ததை பற்றி கூறினர். குறிப்பாக சரவணன் சமைத்ததை பாராட்டி பேசினர். பெண் நடுவர் நான் தெரியாமல் பேசிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் நாளைக்கு என் வீட்டில் இதை சமைத்து சாப்பிடுவேன் என கூறினார்.

இந்த போட்டியின் வெற்றியாளர்கள் என்பதை அறிவிக்க சில நிமிடங்கள் ஆகும் என நடுவர்கள் சொல்ல போட்டியாளர்கள் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது. ஏற்கனவே வெளியான ப்ரோமோ வீடியோவில் சரவணன் தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.