இன்றைய எபிசோடில் ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா சீரியலில் இடம்பெற்ற காட்சியை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Raja Rani and Bharati Kannamma Serial Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2. இந்த இரண்டு சீரியல்களையும் பிரவீன் பென்னட் என்பவர் தான் இயக்கி வருகிறார்.

பாரதிகண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடில் அவசரஅவசரமாக ஹாஸ்பிடலுக்கு கிளம்பிய நேரத்தில் பாரதி மேஜையின் மீது காலை இடித்துக் கொள்ள அவருக்கு ஸ்ப்ரே அடித்து மசாஜ் செய்து விடுகிறார் கண்ணம்மா. பிறகு அவரை ஆசுவாசப்படுத்தி வலியே இல்லாமல் செய்கிறார்.

ஐஎஸ்எல் மிரட்டல் : கேரளாவை வீழ்த்தி, சென்னையின் வெற்றி இன்று தொடருமா?

அதைப்போல் ராஜா ராணி 2 சீரியலில் சரவணனுடன் சந்தியா டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் நடனமாடியவர் சந்தியாவின் காலை மிதித்து விடுகிறார். உடனே அவரை வெளியே அழைத்துச் சென்று அமர வைத்து அவரது காலுக்கு ஸ்ப்ரே அடித்து மசாஜ் செய்து வலியே தெரியாதது போல செய்கிறார் சரவணன்.

இந்த இரண்டு காட்சிகளையும் பார்த்த ரசிகர்கள் ஒரே ஸ்ப்ரே பாட்டிலை வச்சிக்கிட்டு 2 சீரியல்ல ரொமான்ஸ் சீனை எடுத்து முடிச்சிட்டீங்க என நெட்டிசன்கள் இயக்குனரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இந்த படம் எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி – Samuthirakani Emotional Speech | Writer Press Meet | HD