கடையில் நடந்த சந்தியா சரவணன் ரொமான்ஸை சுற்றி நின்று ஊர் மக்கள் வேடிக்கை பார்க்க அந்த நேரத்தில் சிவகாமி வருவதால் புது பிரச்சனை எழுகிறது.

Raja Rani 2 Serial Episode Update 22.10.21 : சரவணன் தூங்கி கொண்டிருக்க பக்கத்தில் அமர்கிறார் சந்தியா. பாவம் இவரு எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும் தலைக்கு எடுத்துட்டு போகாமல் அநியாயத்து நல்லவரா இருக்காரு, என்னால இவருக்கு எவ்வளவு பிரச்சனை. பாவம் இவரு, நான் இவரோட வாழ்க்கையில் வரலனா அத்தைக்கு பிடித்த மாதிரி குழந்தை குட்டின்னு சந்தோசமா இருப்பாரு. என்னை கல்யாணம் பண்ண பாவத்துக்காக இன்னும் என்னெல்லாம் பட போறாரோ, இனிமே என்னால இவருக்கு எந்த பிரச்னையும் வர கூடாது என கடவுளிடம் வேண்டி கொள்கிறார். சரவணன் தூங்குவது போல நடித்து கொண்டே சந்தியா செய்வதை பார்க்கிறார்.

கடையில் நடந்த சந்தியா சரவணன் ரொமான்ஸ்.. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஊர் மக்கள் - ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் அப்டேட்

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

சரவணன் பக்கத்தில் படுத்த சந்தியா இது ஆடி மாசம் என கீழே படுத்து கொள்ள முடிவு செய்து கீழே படுக்க பாய் தலையணை எடுக்க முயற்சி செய்து கீழே விழுகிறார். பின்னர் சந்தியா கீழே படுத்து தூங்குகிறார். சரவணன் எழுந்து சந்தியாவின் காலை அமுக்கி விட்டு கொண்டிருக்கிறார். சந்தியா எழுந்து வேண்டாம் என சொல்கிறார். இப்படி கீழே விழ தான் கடவுள்கிட்ட வேண்டிகிட்டீங்களா? என சொல்ல சந்தியா அத்தை சொன்னதை பின்பற்ற தான் கீழே படுக்க நினைத்தேன் என கூறுகிறார். அதெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் இருக்க தம்பதிக்கு தான், நமக்கு இல்லை என சொல்கிறார். அப்போ இதெல்லாம் நீங்க தூங்காம பார்த்து இருந்தீர்களா என இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது. பின்னர் சரவணன் சந்தியாவை கட்டிலில் வந்து படுக்க சொல்ல சந்தியா மறுக்க அவரை அழைத்து சென்று படுக்க வைக்கிறார்.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.! | Marie Claire Paris Salon | HD

காலையில் அர்ச்சனா, செந்தில் ஆகியோர் சந்தியா செய்ததை குத்தி காட்டி பேசி கொண்டிருகின்றனர். சரவணனின் அப்பா அனைவரையும் திட்ட அந்த நேரத்தில் சிவகாமி வருகிறார். அனைவரும் காப்பி குடித்து கொண்டிருக்க அந்த நேரத்தில் பாஸ்போர்ட்டை துளைத்த சஞ்சனா நேரில் நன்றி சொல்ல வந்துள்ளார். வீட்டில் எல்லாருக்கும் நன்றி சொல்லி விட்டு பாஸ்போர்ட்டை துளைத்த விசயத்தை கூறுகிறார். சந்தியா கடவுள் மாதிரி பாஸ்போர்ட்டை கொடுத்தாங்க என சொல்கிறார். பிறகு சந்தியா செய்த உதவிக்கு வாட்ச் ஒன்றை கிப்ட்டாக கொடுக்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். வந்தவருக்கு ஸ்வீட் கொடுத்து உபசரிக்கின்றனர். மேலும் அந்த சஞ்சனா சரவணனை ஒரு குக்கிங் போட்டியில் கலந்து கொள்ள வைக்க சொல்கிறார்.

பின்னர் சஞ்சனா வீட்டில் இருந்து கிளம்ப பின்னர் சரவணனின் அப்பா இப்போ என்ன சொல்ற சிவகாமி என கேட்க சொல்றாங்க சொரைக்காய்ல உப்பு இல்லனு என சொல்லி விட்டு உள்ளே எழுந்து செல்கிறார். அர்ச்சனா எல்லா பிரச்சனையும் கடைசில இவளுக்கு சாதகமா தான் நடக்குது என புலம்புகிறார். அதன் பின்னர் சந்தியா கடைக்கு வந்து சரவணனிடம் பேசும் போது அவர் மிளகாயை கட் செய்த போது கண்ணில் கை வைத்து விட அதன் பின்னர் அவருக்கு உதவி செய்கிறார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் சிரிக்க இந்த நேரத்தில் சிவகாமி வந்து விடுகிறார். இது இன்னொரு பிரச்சனையாக மாறுகிறது. இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.