Raja Rani 2 Serial Episode Update 22.09.21

சரவணன் சந்தியா மீது பயங்கர கோபத்தில் உள்ளார் சிவகாமி.

Raja Rani 2 Serial Episode Update 22.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் சந்தியா இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். விபத்துக்குப் பிறகு இருவரும் மனம் விட்டுப் பேசிப் பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டனர்.

மகாளய பட்சம் : முன்னோரை வழிபட முன்னேற்றம் பெருகும்

சரவணன் சந்தியா மீது பயங்கர கோபத்தில் சிவகாமி.. குடும்பத்தில் வெடித்த அடுத்த பிரச்சனை - ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்.!!

இருவரும் இதுவரை நடந்தது என்ன என்பதை சிவகாமியிடம் கூற முடிவு எடுக்கின்றனர். இந்த நேரத்தில் சரவணனின் அப்பா சிவகாமியிடம் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாகக் கூறி விடுகிறார். சரவணன் இது எல்லாம் நடிப்பு தான் செய்தான் என கூறியதை கேட்டு கோபமடைந்த சிவகாமி இதனை இப்போதே சரவணனிடம் கேட்கிறேன் என கிளம்புகிறார்.

அசுர வேகத்தில் நடக்கும் Venthu Thaninthathu Kaadu படப்பிடிப்பு – Massive Update | Simbu | GVM | HD

சரவணன் சந்தியாவும் சிவகாமியிடம் வர சிவகாமியும் இதனைக் கேட்ட முடிவு செய்கிறார். வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிடுகிறார் சிவகாமி. சரவணன் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்கிறார். உன்னை மன்னிக்க முடியாது இதுவும் நடிப்பு தானா இல்ல உண்மையா என எனக்குத் தெரியவில்லை என கோபம் காட்டுகிறார் சிவகாமி.

சந்தியா பேச முயற்சி செய்த போது அவரைப் பேசவிடாமல் தடுக்கிறார் சிவகாமி. நான் என்னமோ சந்தியாவை கொடுமை படுத்த நான் மாதிரிதானே ஆகிடுச்சு என வருத்தப்படுகிறார். உன் பொண்டாட்டிக்காக எங்க எல்லாரையும் தலை குனிய வைத்துட்ட என சரவணனிடம் கூறுகிறார் சிவகாமி.

சரவணன் எவ்வளவு சொல்லியும் சிவகாமி எதையும் கேட்கவில்லை. காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். பின்னர் சிவகாமி அந்த இடத்திலிருந்து கிளம்பி விட மற்றவர்கள் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்