பார்வதி வாழ்க்கையில் விக்கி புதிய கேமை விளையாடி வருகிறார்.

Raja Rani 2 Serial Episode Update 19.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணனிடம் அர்ச்சனாவை அவரது மாமியார் சிவகாமி கோர்த்து விட அதன் பின்னர் வீட்டிற்கு வந்த அர்ச்சனா கணவரிடம் மாமியாரை திட்டி தீர்த்தார். உடம்பு முழுக்க கொழுப்பு என திட்டினார். யாரை திட்டுற என்ன ஏது என்று செந்தில் கேட்க உங்க அம்மாவைத்தான் எனக்கு ஒரு இதுவரை நடந்த விஷயங்களை கூறினார்.

இன்றைய ஆடுகளம் : வழிகாட்டியாய் டோனி

பார்வதி வாழ்க்கையில் விலையாடும் விக்கி.. மாமியாருக்கு தெரியாமல் சந்தியா செய்யப்போகும் வேலை - ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்

அதன் பிறகு இரவு அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சரவணன் வந்து உங்கள் எல்லோரிடமும் ஒன்று சொல்ல வேண்டும் என சொல்லிவிட்டு இந்த பைக் எல்லோருக்கும் தான் யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தலாம். மேலும் ஆதி லைசென்ஸ் வாங்குவதற்கு விண்ணப்பத்தை வாங்கி வந்து இருப்பதாகவும் அதனை எடுத்து கொடுத்தார். சரவணன் செயலை சிவகாமி பாராட்டியதோடு சந்தியாவிடம் தன்னுடைய பிள்ளையை யாராலயும் மாத்த முடியாது. அவன் சொக்கத்தங்கம் என கூறினார். எது எப்படியோ உங்க மனசுல அவர் மீது நல்ல அபிப்ராயம் ம வந்துச்சுல அதுவரைக்கும் சந்தோஷம் என சந்தியா நினைத்துக் கொள்கிறார்.

Sir.., வலிமை Update கிடைக்குமா.. பொது மேடையில் கேட்ட Harish Kalyaan.! | Oh Manapenne Press Meet | HD

பாஸ்கர் பார்வதி தன்னை பார்க்க வராமல் இருப்பதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் விக்கி வந்து இன்னும் மூட்டி விடுகிறார். ஒருவேளை அவர்களுக்கு வேறு ஏதாவது காதல் இருந்து இருக்குமோ? இல்ல கல்யாணத்துல விருப்பம் இல்லாமல் இருக்குமோ எதுவாக இருந்தாலும் நல்லா விசாரிச்சிக்கோங்க பிரதர் வாழ்க்கை பிரச்சினை என கொளுத்திப் போட்டு செல்கிறார்.

மறுநாள் காலையில் சரவணன் கையில் பாஸ்போர்ட் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து இதனை யாரோ நம்முடைய கடையில் விட்டு விட்டு சென்றுள்ளார்கள் என்ன ஏது என தெரியவில்லை என சிவகாமியிடம் கொடுக்கிறார். அவருக்கு அது என்னவென்று தெரியவில்லை. சந்தியா வந்து இதனை பார்த்துவிட்டு பாஸ்போர்ட் இது இருந்தால்தான் வெளிநாடு செல்ல முடியும் வெளிநாட்டிலிருந்து இங்கே வர முடியும் என கூறுகிறார். இதனை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து விடலாம் என கூறியதற்கு சிவகாமி திட்டி தீர்க்கிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் ஒன்னும் போகவே தேவையில்லை என கூறுகிறார். வீட்டில் இருந்தவர்கள் எவ்வளவு சொல்லியும் அதனை சிவகாமி ஏற்றுக்கொள்ளவில்லை. சரவணன் அந்த பாஸ்போர்ட்டை கடையில் வைக்கிறேன் யாராவது கேட்டால் கொடுத்து விடுகிறேன் என வாங்கிக் கொண்டு செல்கிறார்.

ஆனால் சந்தியா பாஸ்போர்ட் தொலைத்தவர்கள் ரொம்ப பதறிப் போய் இருப்பார்கள் எண்ணி அதனை எப்படியாவது போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார். ஸ்டாப்ளர் பின்னை எடுத்துச் செல்வதற்கு சரவணன் வீட்டிற்கு வந்தபோது அவரிடம் இது பற்றி பேசுகிறார். அம்மா பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டேன் என சரவணன் கூட அவரிடம் இதனை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தாக வேண்டும் என எடுத்துச் சொல்கிறார்.

இந்தப் பக்கம் சரவணன் அர்ச்சனா பெட்ரூமில் இருக்கும்போது அவரை கட்டி பிடித்து சந்தோஷமாக இருக்க அழைக்கிறார். நீ கர்ப்பமாகிவிட்டால் அம்மா உன்னை ஒரு வேலையும் வாங்க மாட்டாங்க என கூறுகிறார். ஆனால் இவரிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என திட்டம் போட்டு எனக்கு கை காலெல்லாம் வலிப்பதாக கூறி படுத்துக் கொள்கிறார் அர்ச்சனா. இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.