ஆலியா மானசா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ரியா ஒரு தகவலைக் கூறியுள்ளார்.

Raja Rani 2 Riya Tweet : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் ஆலியா மானசா.

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வந்த இவர் பிரசவம் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக்கொள்ள அவருக்கு பதிலாக புதிய சந்தியாவாக ரியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவருடைய முதல் நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பான நிலையில் ரசிகர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் தற்காலிகமாகத்தான் நடிக்க போறீங்க? ஆமா நீ சொல்லுங்க ப்ளீஸ் சந்தியா ரோலுக்கு ஆல்யா மானசா கரெக்டாக இருப்பார் என ரசிகை ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால் ரியா இல்லை இனி நான்தான் பர்மனென்ட் சந்தியா என தெரிவித்துள்ளார். இதனால் ஆலியா மானசா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.