ராஜா ராணி 2 சீரியலில் மயில் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவரின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Raja Rani 2 Mayilu in Modern Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. ஆலியா மானசா நாயகியாக நடிக்க சித்து நாயகனாக நடித்து வரும் இந்த சீரியலில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அர்ச்சனா வில்லியாக நடித்து வருகிறார்.

முகமது அமிர்-ஹர்பஜன் சிங் டுவிட்டரில் எல்லை தாண்டிய மோதல்..

இந்த சீரியலில் சிவகாமி வீட்டு வேலைக்காரப் பெண்ணாக மயிலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. பக்கா கிராமத்து பெண்ணாக சூதுவாது தெரியாமல் இந்த சீரியலில் இவர் நடித்து வருகிறார். ஆனால் உண்மையில் நவ்யா சுஜி மாடல் டைப் கேர்ள் என்பது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஆம் மாடர்ன் உடையில் நவ்யா சுஜி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

Pandian Stores ல எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்திங்க! – Actor Vasanth Speech | Osara Kadhal Album Song