அர்ச்சனாவை அடித்து துன்புறுத்தினார் கருணாகரன்.

Raja Rani 2 Episode Update 12.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட் இன் சரவணன் கடையில் இருக்கேன் அப்போது அங்கு வந்த சந்தியா உங்களிடம் தனியாக பேசவேண்டும் என கூறி அர்ச்சனாவின் நடவடிக்கை சரி இல்ல அவ ஏதோ பிரச்சனையில் இருக்கான்னு நினைக்கிறேன் என கூறுகிறார். செந்தில் எதையாவது சொன்னாரா என கேட்க எதுவும் சொல்லல அவர் சொல்லலனாலும் நீங்க என்னனு கேளுங்கள் என கூறுகிறார்‌.

அர்ச்சனாவை அடித்து துன்புறுத்திய கருணாகரன்.. கடைசியில் சந்தியா வைத்த செக் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சரவணன் சரி என சொல்கிறார். பிறகு சந்தியா வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் அப்போது அவரால் படிக்க முடியவில்லை. அர்ச்சனா பதற்றத்தில் இருந்த முகம் தான் அவருடைய கண்கள் முன் அடிக்கடி வந்து போகிறது. இந்த நேரத்தில் சரவணன் வர அவரிடம் செந்திலிடம் கேட்டீங்களா என்ன ஏது என விசாரிக்க அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறான் என கூறுகிறார்.

பிறகு மறுநாள் காலையில் அர்ச்சனாவை அடைத்து வைத்துப் பேசுகிறார் கருணாகரன். உன் வீட்டில் பிரச்சனையா ஏன் இன்னும் யாரும் வந்து கேசை வாபஸ் வாங்கவில்லை என கேட்கிறார். எனக்கு எதுவும் தெரியாது என்ன விட்டுடுங்க நான் விடியோட பேசிட்டு இருந்த விஷயம் உங்க வீட்ல தெரிஞ்சா என்ன கொன்னுடுவாங்க பெரிய பிரச்சனை ஆகும் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் என்னால் பேச முடியாது என கூறுகிறார்.

இதனால் கடுப்பான கருணாகரன் நீ நான் சொல்வதை செய்யவில்லை என்றால் உன்னுடைய புருசனை கொன்றுவிடுவேன் என கூறுகிறார். மேலும் அவனை எப்படி கொள்ளட்டும் என நான்கு ஆப்ஷன்களை கொடுக்கிறார். எங்களை விட்டுடுங்க நாங்க இந்த ஊரை விட்டு ஓடிப் போயிடுறோம் என சொல்லு நீங்க எங்கேயாவது போய் சந்தோஷமாக இருப்பீர்கள் என் புள்ள ஜெயில்ல கிடந்து சாக வேண்டுமா என அர்ச்சனாவை பளார் என்று அறைய அவர் கீழே விழப் போகிறாள். அந்த நேரத்தில் அர்ச்சனாவை தாங்கிப்பிடித்து என்ட்ரி கொடுக்கிறார் சந்தியா.

பிறகு கருணாகரன் சந்தியாவிடம் ஆவேசமாகப் பேச அர்ச்சனாவை மிரட்டின எல்லாத்தையும் நான் ரெக்கார்ட் பண்ணி வைத்திருக்கிறேன். இது மட்டும்தான் போலீஸில் கொடுத்தா ஜென்மத்துக்கும் நீயும் உன் பிள்ளையும் கலி தான் சாப்பிடணும் எனக்கூறி கருணாகரனை மிரட்டி அடக்கி அர்ச்சனாவை அங்கிருந்து அழைத்து வருகிறார்.

அர்ச்சனாவை அடித்து துன்புறுத்திய கருணாகரன்.. கடைசியில் சந்தியா வைத்த செக் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அர்ச்சனாவை தனியாக அழைத்துச் சென்று உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை. பார்வதியுடன் கல்யாணத்தை நிறுத்த அந்த விக்கியோட சேர்த்து நீ செய்த எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும். இதெல்லாம் செய்ய உனக்கு அசிங்கமாக இல்லையா? இந்த விஷயம் எல்லாம் வீட்டுக்கு தெரிந்தால் என்ன ஆகும் அது எல்லாம் யோசித்து கூட பார்க்க மாட்டியா? இனி மேலாவது திருந்து என அட்வைஸ் செய்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.