பார்வதியை டார்ச்சர் செய்து வருகிறார் விக்கி.

Raja Rani 2 Episode Update 02.05.22 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாஸ்கரின் பெற்றோர் சந்தியாவை சந்தித்து அர்ச்சனா அவனுடைய அப்பா அம்மாவோட வந்து பார்வதியுடன் நிச்சயதார்த்தம் மட்டும்தானே முடிந்து இருக்கு அதை அப்படியே நிறுத்திவிட்டு என் தங்கச்சி கல்யாணம் பண்ணி வைத்து விடலாம் என்று பேசிய விஷயத்தை கேட்டு சந்தியா அதிர்ச்சி அடைகிறார். என்னிடம் சொன்ன இந்த விஷயத்தை தயவுசெய்து அத்தையிடம் சொல்ல வேண்டாம். அவங்க ரொம்ப அதிர்ச்சியா ஆகிடுவாங்க என சந்தியா கூறுகிறார். அர்ச்சனா கல்யாண தெரியவில்லை ஏதாவது திட்டம் வச்சிருப்பா அவளை கண்காணித்துக் கொண்டே இருக்கணும் என நினைக்கிறார். மேலும் இந்த விஷயத்தை சரவணனிடம் சொன்னால் அவர் நமக்கு உறுதுணையாக இருப்பார் என எண்ணுகிறார்.

பார்வதியை டார்ச்சர் செய்யும் விக்கி.. அர்ச்சனா செய்யும் வேலை.. சந்தியா எடுத்த முடிவு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மூவரும் ஒன்றாக பேசுவதை பார்த்த அர்ச்சனா அப்படி என்ன பேசுறாங்கன்னு தெரியல, நாம மாப்பிள்ளை கேட்டு போன விஷயத்தை சந்தியாவிடம் சொல்லிட்டா அவன் ஏதாவது திட்டத்தை போற்றி இந்த கல்யாணத்தை நடத்தி விடுவார் என புலம்புகிறார். இந்த பக்கம் பார்வதி விக்கியின் மிரட்டலால் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க திடீரென கரண்ட் கட் ஆகிறது. பார்வதி மெழுகுவர்த்தியை தேடி பின் பக்கம் திரும்ப வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறார். மீண்டும் தன்னிடம் ஒரு மணி நேரம் மனைவியாக இருக்க வேண்டும் என மிரட்டுகிறார். இந்த நேரத்தில் பாஸ்கரின் அம்மா வந்து கதவைத் தட்ட வீட்டில் ஒளிந்து கொள்ள ஏன் இவ்வளவு நேரத்திற்கு என கேட்க எனக்கு இருட்டு நாளை பயம் என பார்வதி சொல்லி சமாளித்து அவரிடமிருந்து மெழுகுவர்த்தி வாங்கி கொண்டு அவரை வெளியே அனுப்பி வைக்கிறார்.

அதன்பிறகு விக்கியிடம் தயவுசெய்து இங்கிருந்து போய்விடு என கெஞ்சுகிறார். ஆனால் வீட்டில் நான் கேட்டதே கிடைக்காமல் போக மாட்டேன் இல்லை என்றால் பாஸ்கரின் அம்மாவிடம் உண்மையை சொல்லி விடுவேன் என மிரட்டுகிறார். எனக்கு கொஞ்சம் டைம் கொடு நான் சீக்கிரம் சொல்கிறேன் என கூறி விக்கியை வெளியே அனுப்புகிறார். தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து தன்னுடைய தங்கச்சியை திருமண அலங்காரத்தில் அழைத்து வருமாறு கூறுகிறார்.

இந்த பக்கம் பார்வதி போன் செய்யாததால் வீட்டில் அவருக்கு இன்னொரு அதிர்ச்சி கொடுக்க கையில் கிப்ட் பாக்ஸ் ஒன்றை எடுத்துவந்து வாட்ச்மேனிடம் இதை கல்யாண பெண்ணிடம் கொடுத்து விடுமாறு கூறுகிறார். இதை அர்ச்சனா பார்த்துவிட வாட்ச்மேனிடம் இருந்து அந்த கிப்ட்டை வாங்கிப் பிரிக்க முயல்கிறார்.

பார்வதியை டார்ச்சர் செய்யும் விக்கி.. அர்ச்சனா செய்யும் வேலை.. சந்தியா எடுத்த முடிவு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த நேரத்தில் செந்தில் வந்து அதைத் தடுத்து அர்ச்சனாவிடம் இருந்து கிப்ட்டை வாங்கி ஆதியிடம் கொடுத்து பார்வதியிடம் கொடுக்குமாறு சொல்லி விடுகிறார். பிறகு அர்ச்சனாவை திட்டி விட்டு அவர் அங்கிருந்து கிளம்புகிறார். இந்த பக்கம் சந்தியா சரவணன் அழைத்து விஷயத்தைச் சொல்ல முயற்சி செய்கிறார். அதன் பின்னர் சந்தோஷமாக இருக்கும் சரவணன் மனநிலையை மாற்ற வேண்டாம் என்ன நடக்கிறது என பார்த்து அதன் பிறகு அவரிடம் கூறலாம் என முடிவு செய்து வேறு எதையோ கேட்டு பேச்சை மாற்றி விடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.