சாமியாடி செல்வத்தை வதம் செய்துள்ளார் சரவணன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் சாமி ஆடி தீவிரவாதிகளை ஓட விட்டு செல்வத்தை துரத்தி வர செல்வம் கோவில் அருகே வந்து விழ அங்கு அவனை அறிவாளால் வெட்டி வதம் செய்கிறார்.

சாமியாடி செல்வத்தை வதம் செய்த சரவணன்.. சிவகாமி கொடுத்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சரவணன் வெட்டியதை தொடர்ந்து அங்கு வந்த கௌரி, சந்தியா உள்ளிட்டோர் இதை பார்த்து அதிர்ச்சி அடைய பிறகு கௌரி துப்பாக்கியால் செல்வத்தை சுட்டு அவனை தான் கொன்றது போல மாற்றுகிறார். பிறகு அங்கு வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தியா தங்களது அனுமதி இல்லாமல் இப்படி செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்ல அப்துல், சேத்தன் உள்ளிட்டோர் எங்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள் என சொல்ல கௌரி மேடம் அப்படி நடவடிக்கை எடுக்க விடமாட்டேன். அவங்களுக்காக எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என கூறுகிறார்.

சாமியாடி செல்வத்தை வதம் செய்த சரவணன்.. சிவகாமி கொடுத்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சந்தியாவின் துணிச்சல் மிக்க செயலை பாராட்டுகிறார். இந்த பக்கம் சரவணன் மீட்கப்பட்ட செய்தியை கேட்டு குடும்பத்தினரில் எல்லோரும் சந்தோஷப்பட்டு சந்தியாவை பாராட்டி பேச சிவகாமி சந்தியாவின் மீது கோபத்துடன் இருக்கிறார். அடுத்து ரூமில் சந்தியா நாளைக்கு பட்டமளிப்பு விழா, அத்தை என்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என சொல்ல சரவணன் குடும்பத்தாருக்கு போன் போட்டு வர வைக்க முயற்சி செய்ய சிவகாமி கோபத்தை வெளிக்காட்டுகிறார்.

சாமியாடி செல்வத்தை வதம் செய்த சரவணன்.. சிவகாமி கொடுத்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த வீட்ல இருந்து யார் வேணாலும் அந்த நிகழ்ச்சிக்கு போயிட்டு வாங்க ஆனா அதோட என் முகத்துல முழிக்க கூடாது என சொல்ல சந்தியா கண்ணீர் விடுகிறார். பிறகு சரவணனின் அப்பா சந்தியாவிடம் பேசி அவருக்கு ஆறுதல் கூறுகிறார். அதன் பிறகு ரவி சிவகாமி இடம் பேசி சமாதானம் செய்ய முயற்சி செய்ய சிவகாமி மனம் மாறாமல் அப்படியே இருக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.