லீவு கேட்ட சந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கௌரி மேடம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் வீட்டில் செந்தில் அவசர அவசரமாக சாப்பிட அவரது அப்பாவும் அம்மாவும் ஏன்டா இவ்வளவு அவசரமா சாப்பிடுற என்ன சொல்ல செந்தில் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே கிளம்புகிறார். அர்ச்சனா என்ன பண்றது என் புள்ள பிறந்தநாள் விழாவுக்கு எல்லா வேலையும் அவரே தானே பண்ண வேண்டியது இருக்கு. ஆதி எங்க போனான்னு தெரியல, சரவணன் மாமா தேர்தலை மனசுல வச்சிக்கிட்டு எதையும் பண்றது இல்ல என பேச அப்போது சரவணன் வீட்டுக்கு வருகிறார்.

லீவு கேட்ட சந்தியா, ஷாக் சம்பவம் செய்த கௌரி மேடம்.. பிரச்சினையை கிளப்பிய அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

சிவகாமி சரவணனை சாப்பிட கூப்பிட்டு அர்ச்சனாவிடம் அவன் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் எத பத்தியும் பேசாத என கூற சரவணன் வந்து அமர்ந்ததும் அர்ச்சனா சந்தியா வரமாட்டாளாமே என பிரச்சனையை கிளப்பி சரவணன் எழுந்து செல்ல வைக்கிறார். அடுத்து சந்தியா மீண்டும் கௌரி மேடம் ஐ சென்று சந்தித்து லீவ் ஃபார்ம் கொடுத்திருந்தேன் என கேட்க நான் தான் லீவு கொடுக்க முடியாதுன்னு சொன்னேனே அப்புறம் எதுக்கு லீவ் ஃபார்ம் கொடுத்த என டென்ஷனாகி அந்த ஃபார்மை கிழித்து போடுகிறார்.

அதன் பிறகு சந்தியா சரவணனுக்கு போன் போட்டு லீவ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் லீவ் ஃபார்மே கிழிச்சு போட்டுட்டாங்க என விஷயத்தை சொல்லி பிறகு இந்த கசப்பான விஷயங்களை மறக்க சரவணனிடம் சந்தோசமாக பேசுகிறார். பின்னர் பயிற்சியாளர்களுக்கு தண்ணீர் நிரப்பும் போட்டி வைக்கப்படுகிறது.

இந்த போட்டியில் பெரிய டேங்கில் இருந்து 20 கிலோ எடையுள்ள பாக்கெட் தண்ணீர் எடுத்து அதை பக்கத்தில் உள்ள ஓட்டை பக்கெட்டில் ஊற்றி அந்த தண்ணீரை எடுத்து போய் 200 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் டேங்கில் நிரப்ப வேண்டும் என கூறுகின்றனர். சந்தியா டீம் மீது இருக்கும் பிளாக் மார்க்கை போக்க இதில் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

லீவு கேட்ட சந்தியா, ஷாக் சம்பவம் செய்த கௌரி மேடம்.. பிரச்சினையை கிளப்பிய அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அப்துல் இருபது கிலோ எடையுள்ள பக்கெட்டில் தண்ணீரை எடுக்கும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல சந்தியா அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார். அது கஷ்டமான விஷயம் உங்களால் முடியாது என அப்துல் சொல்லியும் சந்தியா அந்த வேலையை நான் செய்கிறேன் என உறுதியாக இருக்கிறார். பிறகு வேறு வழி இல்லாமல் சரி என அப்துல் ஒப்புக்கொள்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.