சிவகாமி பிடிவாதமாக இருக்க சரவணனை வீட்டுக்கு கொண்டுவர அவருடைய அப்பா திட்டமொன்றை போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சரவணன் சந்தியா தங்களை சிவகாமி வீட்டை விட்டு வெளியே போக சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கின்றனர். கண்டிப்பா பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும் பூட்டு தயாரிக்கும் போதே அதுக்கு சாவி தயாரிக்கிற மாதிரி தான் என சந்தியா சொல்கிறார். பிறகு சந்தியா பசிக்கிறது என சொந்த சரவணன் சமோசா போட்டு கொடுக்கிறார். ஆனால் சாப்பிடும் நேரத்தில் சிவகாமி சாப்பிட்டாரா இல்லையா என்ற சந்தேகத்தில் சரவணன் மயிலுக்கு மயில் எடுத்துப் பேச சரவணன் சிவகாமி பற்றி விசாரிக்க சிவகாமி நான் சாப்பிட்டா என்ன சாப்பிடலன்னா என்ன அவங்களை சாப்பிட சொல்லு என கூறுகிறார். சரவணன் அம்மா சாப்பிடாம நான் என்னைக்கு சாப்பிட்டு இருக்கேன் என சொல்ல சிவகாமி எனக்கு பசிக்குது நான் போய் சாப்பிடுறேனு சாப்பிடுகிறார்.

பிடிவாதமாக இருக்கும் சிவகாமி.. சரவணன் வீட்டுக்குக் கொண்டுவர அவருடைய அப்பா போட்ட திட்டம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சரவணனின் அப்பா ரவி சிவகாமியை சமாதானம் செய்ய முயற்சி செய்ய அவர் விடாப்பிடியாக இருக்கிறார். சரவணன் இல்லாம நீ இருப்பியா என கேட்டேன் அவனே இருக்கும் போது நான் இருப்பேன் என சொல்லிவிட்டு சிவகாமி சென்று விடுகிறார். இதற்கு ஏதாவது வழி பண்ணனும் என அவர் யோசிக்கிறார்.

இந்த பக்கம் செந்தில் சரவணனை எப்படி வீட்டிற்கு அழைத்து வருவது என யோசிக்க அர்ச்சனா அதெல்லாம் நீங்க எதுவும் பண்ணாதீங்க அமைதியா இருங்க என கூறுகிறார். சரவணன் வரலைன்னா வீட்டுக்கு செலவுக்கு மொத்த பணமும் நாமதான் கொடுக்கணும் என சொல்ல அது எப்படி வீட்டுக்கு தரவேண்டிய பணத்தை மட்டும் மாசம் கொடுக்க சொல்லுங்க என சொல்ல அவன் வேண்டாம் அவனுடைய பணம் மட்டும் வேண்டுமா என செந்தில் திட்டிவிட்டு உள்ளே செல்கிறார்.

பிடிவாதமாக இருக்கும் சிவகாமி.. சரவணன் வீட்டுக்குக் கொண்டுவர அவருடைய அப்பா போட்ட திட்டம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மறுநாள் காலையில் சந்தியா சீக்கிரம் எழுந்து கடையிலேயே கோலம் போட்டுக் கொண்டே இருப்பேன் சரவணன் எழுந்து வந்து உதவி செய்கிறார். இந்த நேரத்தில் அவருடைய அப்பா வந்து நான் என்ன சொன்னாலும் செய்வியா என சரவணனிடம் கேட்க சொல்லுங்கப்பா என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு முடிவடைகிறது.