சரவணன் சந்தியாவை சிவகாசி வீட்டை விட்டு வெளியே போக சொல்ல சரவணன் அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா போலீசுக்கு படிப்பு விஷயம் அறிந்த சிவகாமி இருவரும் தனக்கு துரோகம் செய்து விட்டனர். சந்தியா எப்படி பொய் சொல்லி இந்த வீட்டுக்குள்ள வந்தாளோ அதே மாதிரி என் பையனையும் பொய் சொல்ல வச்சுட்டா, ரெண்டு பேரும் இந்த வீட்ட விட்டு வெளிய போங்க என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன சிவகாமி.. சரவணன் எடுத்த முடிவு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சிவகாமியின் கணவர் ரவி உட்பட அனைவரும் சிவகாமியை சமாதானம் செய்ய முயற்சி செய்ய அவர் சரவணன் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை அவன் முகத்தில் முழிக்கவே வெறுப்பா இருக்கு என்ன சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

உடனே அர்ச்சனா அவர் பங்குக்கு சந்தியா நீ என்னை விட பொய் இருக்க நீ எனக்கு அட்வைஸ் பண்ணுற பேசத் தொடங்க சிவகாமி யாரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க கிடையாது என திட்டுகிறார்.

பிறகு சரவணன் இனிமே நீங்க சொல்ற வரைக்கும் உங்க முகத்துல முழிக்க மாட்டேன் நான் உங்ககிட்ட நிறைய பொய் சொல்லிட்டேன் துரோகம் பண்ணிட்டேன் நான் வீட்டை விட்டு போய் விடுகிறேன் என சொல்லி வீட்டை விட்டு கிளம்ப சிவகாமி அமைதியாகவே இருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சரவணனை தடுத்து நிறுத்த சரவணன் சந்தியாவை அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறார்.

வெளியே போன சந்தியா ஸ்வீட் கடை அருகே அமர்ந்து எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என சொல்லி அத சரவணன் உங்க மேல எந்த தப்பும் இல்ல ஆரம்பத்திலிருந்து அம்மாவிடம் உண்மையை சொல்லுங்க என நீங்க சொல்லிட்டு தான் இருந்தீங்க, ஆனா நான்தான் கேட்கவே எல்லா தப்பும் என் மேலதான் என கண்கலங்கி அழுகிறார்.. அத்தை உங்க மேலே நிறைய பாசம் வச்சு இருக்காங்க அவர்களே உங்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்ற அளவுக்கு நாம அவங்கள கஷ்டப்படுத்தி இருக்கோம் என சந்தியா சொல்கிறார்.

சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன சிவகாமி.. சரவணன் எடுத்த முடிவு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

திரும்பவும் அத்தை கிட்ட பேசிப் பார்க்கலாம் என சந்தியா சொல்ல இப்போ பேச வேண்டாம் எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என சரவணன் கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.