கல்யாணத்துக்காக தடபுடலாக பார்வதியின் குடும்பம் கிளம்பியது.

Raja Rani 2 Episode Update 28.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு சந்தியா ரூமில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க உள்ளே வந்த சரவணன் சந்தியாவிடம் பெற்ற பார்வதி தேவியை மனதில் வைத்துக்கொண்டு தவித்துக் கொண்டிருப்பதை கூறுகிறார். பிறகு சரி பார்வதியை கூட்டிட்டு வாங்க பேசலாம் என கூறுகிறார். சந்தியாவின் பார்வதி ரூமுக்கு சென்று அவரை அழைத்து வருகிறார். அர்ச்சனா பார்வதியை சங்கி அழைத்துச் செல்வதைப் பார்த்து விட்டு என்ன பேசுகிறார்கள் என ஒட்டு கேட்கிறார்.

பார்வதியிடம் பேசிய சந்தியா சரவணன்.. ஒட்டு கேட்டு சிவகாமியிடம் சிக்கிய அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சரவணன் பார்வதியிடம் ஏன் இப்படி சோகமாக இருக்க எனக் கேட்க பயமாக இருக்கிறது விக்கி என்ன பண்ணுவான்னு தெரியல என கண் கலங்குகிறார். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ பயப்படாதே என சரவணன் தைரியம் சொல்கிறார். அர்ச்சனா ஒட்டுக்கேட்டல் என்பதை பார்த்து சிவகாமி அதட்டி கூப்பிடுகிறார். பிறகு பார்வதி சந்தியா சரவணன் மூவரும் ரூமில் இருந்து வருவதைப் பார்த்து நீ இந்த நேரத்தில் இங்கு என்ன பண்ணிட்டு இருக்க ஒரு ரூமுக்கு போ என அனுப்பி வைக்கிறார்.

அர்ச்சனாவை இங்கு என்ன பண்ணிட்டு இருந்த எனக் கேட்க கம்பல் திருகாணியை காணவில்லை அதைத் தேடிக்கொண்டு இருந்தேன் என கூறுகிறார். பிறகு ஒரு வழியாக சமாளிக்க விடுகிறார். ஆனால் சந்தியா ஒட்டு கேட்டுட்டு இருந்த என சொல்ல வீணா என் மேல பழி போடாதே என கூறுகிறார். பார்வதி கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை வந்து அதுக்கு நீதான் காரணம், அதை ஆதாரத்தோடு நிரூபிப்பேன் என கூறுகிறார்.

பிறகு மறுநாள் காலையில் பார்வதி கல்யாணத்திற்காக மண்டபத்திற் குச் செல்ல அனைவரும் தயாராகி உள்ளனர். சாமி கும்பிட்டுவிட்டு பார்வதி எல்லோரிடமும் கண்ணீரோடு கட்டியணைத்து பேசுகிறார். அவருடைய அப்பா நாங்க வேண்டி பெத்த குழந்தை நீ ஒரு முறை வந்து பாரு என கூறுகிறார். சிவகாமியே அதேபோல் கண்கலங்கி மகளுக்கு அறிவுரை கூறுகிறார்.

பார்வதியிடம் பேசிய சந்தியா சரவணன்.. ஒட்டு கேட்டு சிவகாமியிடம் சிக்கிய அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சரவணன் அண்ணனால என்ன பண்ண முடியுமோ அதை நான் உன்னை மிஸ் பண்ணியிருக்கேன். சில விஷயங்கள் பண்ண முடியாமல் கூட போயிருக்கலாம் என்னால் முடிந்ததை உனக்கு எப்போதும் பண்ணிக்கிட்டே இருப்பேன். எதுவாக இருந்தாலும் என்னை கூப்பிட்டால் உடனே வந்து நிற்பேன் என கூறுகிறார். செந்தில் உன்னால எனக்கு நிறைய பாசம் இல்லை என கூறி அது ஒரு பங்குக்கும் அறிவுரை கூறுகிறார். அர்ச்சனா சந்தோஷமாக இரு என முடித்து விடுகிறார். சந்தியா தைரியமாக விட்டுக்கொடுத்து இரு என அறிவுரை கூறுகிறார். அது நல்ல பேர் வாங்கி கொடு என்று அறிவுரை வழங்குகிறார்.

பிறகு எல்லோரும் மண்டபத்துக்கு கிளம்ப இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.