போட்டியில் ஜெயிக்க சந்தியா, சரவணன் பிராடு தனம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Raja Rani 2 Episode Update 27.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கோயிலில் காப்புக் கட்டி விட்டதால் சரவணன் போட்டியில் அசைவம் சமைக்கக் கூடாது என சிவகாமி கூறிவிடுகிறார். இதனால் அனைவரும் ஊருக்கு கிளம்ப உள்ள நிலையில் சரவணன் இது குறித்து போட்டி நடத்தும் குழுவினரிடம் சொல்ல செல்கிறார். அப்போது அவரை தடுத்து இன்றைக்கு ஒருநாள் மட்டும் சொல்லாமல் காத்திருங்கள் என கூறுகிறார் சந்தியா. ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என பொருத்திருந்து பார்க்கலாம் என கூறுகிறார்.

போட்டியில் ஜெயிக்க சந்தியா, சரவணன் செய்ய போகும் பிராடு தனம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் நடுஇரவில் சரவணனின் அப்பா தூங்காமல் வெளியில் நடமாடிக் கொண்டிருக்க அப்போது வந்த சிவகாமி எங்க இருக்கீங்க எனக்கேட்க அவர் சரவணனைப் பற்றி வருத்தப் படுகிறார். அவன் ஜெயிப்பான் நினைத்து ரொம்ப நம்பிக்கையா இருந்தேன் ஆனா இப்போ போட்டியில கலந்துக்காதது மாதிரி ஆகிடுச்சு என சொல்கிறார். பிறகு சிவகாமி எனக்கும் வருத்தம் இருக்கு என கூறுகிறார். சந்தியாவுக்கு இது ரொம்ப வருத்தமாக தான் இருக்கும் என சொல்கிறார்.

அதன்பிறகு சந்தியா ஆதியின் லேப்டாப்பை வாங்கி போட்டியில் கலந்து கொள்ள ஏதாவது வழி இருக்கா என பார்க்கிறார். சரவணன் எனக்கு டயர்டாக இருக்கு என தூங்கி விடுகிறார். இரவு முழுவதும் அலசி ஆராய்ந்து ஒரு ஐடியாவை கண்டுபிடிக்கிறார் சந்தியா.

அதாவது சிக்கன் மாதிரியே இருக்கும் ஒரு வெஜிடேரியன் பொருளை சமைத்து அது சிக்கன் என கொடுத்து விடலாம். அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என கூறுகிறார். உடனே சரவணன் ஏமாத்த சொல்கிறீர்களா எனக் கேட்க நான் அப்படி சொல்லல. நாம அத்தையோட நம்பிக்கையும் கெடுக்கக் கூடாது, அது சமயம் இந்த வாய்ப்பையும் விட்டுவிடக் கூடாது அதற்காகத்தான் செல்கிறேன் என கூறுகிறார்.

போட்டியில் ஜெயிக்க சந்தியா, சரவணன் செய்ய போகும் பிராடு தனம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சரவணன் பொய் சொல்லி ஜெயித்தால் அது எனக்கு குத்திக் கொண்டே இருக்கும் வேண்டாம் என கூறுகிறார். அப்படி உங்களுக்கு தோன்றினால் நீங்க ஜெயித்த பிறகு இந்த உண்மையை சொல்லி விடுங்கள் என சொல்கிறார். வீட்ல இருப்பவர்களிடம் எப்படி சொல்லி சம்மதம் வாங்குவது என சரவணன் கேட்க அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என சந்தியா சொல்லி ஒரு வழியாக சரவணனை சம்மதிக்க வைக்கிறார். சரவணன் சரியென ஒப்புக் கொண்டதால் சந்தியா மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.