சந்தியாவிடம் சரவணன் கோபமாக பேசியதைத் தொடர்ந்து பதிலுக்கு சந்தியா கோபத்தை காட்டி சிவகாமியிடம் சிக்கியுள்ளார்.

Raja Rani 2 Episode Update 27.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கடைக்கு கிளம்பும் சரவணன் கிளம்பும்போது ஷூவை பார்த்ததும் அந்த சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் போது ஷூ போட்டுகிட்டா நல்லா இருக்கும் என ஆதியின் ஷூவை போட்டு பார்க்கிறார்.

சந்தியாவிடம் கோபமாக பேசிய சரவணன்.. பதிலுக்கு கோபத்தை காட்டி சிவகாமியிடம் சிக்கிய சந்தியா - ராஜா ராணி சீரியல் எபிசோட் அப்டேட்
துளசி மாலை அணிவதால், ஏற்படும் பலன்கள்

அந்த நேரத்தில் சிவகாமி வர அதனை வேட்டி வைத்து மறைத்துக் கொள்கிறார். வேலைக்கு கிளம்பிய ஆதி ஷூவை தேடும் போது ஒரு ஷூ காணோமே என தேடுகிறார். அப்போது சரவணன் அதை காலில் போட்டிருப்பதை பார்த்து ஏளனமாக கிண்டலடிக்கிறார். சிவகாமி சந்தியா மற்றும் சரவணனின் அப்பா ஆகியோர் ஆதியை திட்டுகின்றனர். அந்த நேரத்தில் ஒரு போஸ்ட் வந்திருப்பதாக சரவணனிடம் கொடுக்கிறார் மயிலு. அது இங்கிலீஷில் இருப்பதால் படிக்கத் தெரியவில்லை என சரவணன் சொல்ல அதற்கும் நக்கல் அடிக்கிறார் ஆதி.

சிம்பு நல்ல Plan போட்டு என்னை ஏமாத்திட்டாரு – Producer Michael Rayappan கதறல்..! | AAA | STR | TR

பிறகு சந்தியா அத்தையிடம் அந்த விஷயத்தைச் சொல்லுங்கள் என தூண்டிவிட அவர் அப்புறம் சொல்லிக்கலாம் என சொல்லிவிட்டு கடைக்கு கிளம்பி விடுகிறார். சரி சாப்பிட்டு போங்க எனக்கு கூறியும் சரவணன் அப்புறம் சாப்பிடுகிறேன் என சென்று விடுகிறார். பிறகு சந்தியா துணியை துவைத்துக் கொண்டிருக்கும் போது சரவணன் வந்து எனக்கு இதெல்லாம் செட்டாகாது தயவுசெய்து என்ன வற்புறுத்தாதீர்கள் என காட்டமாக கூறிவிட்டு சென்று விடுகிறார். இதே வருத்தத்தில் சமைக்க போன சந்தியா அடுப்பில் கடாய் தீய்ந்து கொண்டு இருப்பது கூட தெரியாமல் யோசனையில் இருக்கிறார். டப்பாவை திறக்க முடியாமல் முயற்சி செய்து கொண்டிருந்தபோது சரவணன் வந்து கேஸை ஆப் செய்துவிட்டு குடுங்க நான் திறந்து தருகிறேன் என சொல்லுகிறார். ஆனால் சந்தியா அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல நானே பாத்துக்கிறேன் என கோபமாக கூறிவிடுகிறார். இங்கே நடப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்த சிவகாமி வழக்கம்போல் சந்தியாவை தவறாக புரிந்து கொள்கிறார்.

பிறகு கடைக்கு போன சரவணன் வீட்டில் நடந்ததை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அப்போ சர்க்கரை ஒரு லெட்டர் எழுதிக் கொடுக்குமாறு கூறுகிறார். பிறகு அந்த லெட்டரை எடுத்து வந்து சந்தியாவிடம் கொடுக்கிறார். பதிலுக்கு சந்தியா ஒரு லெட்டர் எழுதி கொடுக்கிறார். அதில் என்ன இருக்கிறது என தெரிந்து கொண்டு பிரச்சினையைக் கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அர்ச்சனா சர்க்கரையை மடக்கி டிபன் பாக்சை கேட்கிறார். சர்க்கரை கொடுக்க மறுக்க இருவரும் அதோடு போராடுகின்றனர். இந்த நேரத்தில் சிவகாமி வெளியே வர டிபன் பாக்சை கீழே தட்டிவிட்டு அதனைத் திறக்க வைக்கிறார் அர்ச்சனா. டிபன் பாக்ஸில் இருக்கும் லெட்டர் வெளியே வருகிறது. இதனை சிவகாமி பார்த்துவிடுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.