பார்வதிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் விக்கி.

Raja Rani 2 Episode Update 27.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. துணி எடுக்க போயிருந்தபோது கடையில் விக்கி பார்வதியை தனியாக அழைத்துச் சென்று நான் சொல்லும் புடவையை தான் எடுக்க வேண்டும் எடுத்துக் கொண்டு ரூமுக்கு வர வேண்டும் என கூறி மிரட்டுகிறார். அதன் பிறகு பார்வதி யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து சிவகாமி அங்கே வந்து பார்க்க அங்கு யாரும் இல்லை. பிறகு பார்வதியை புடவை எடுக்கும் இடத்திற்கு கூட்டிச் செல்ல புடவைகளை எடுத்துக்காட்டியும் இது எனக்கு பிடிக்கவில்லை என கூறுகிறார் பார்வதி. பிறகு விக்கி பின்புறத்தில் ஒரு புடவையை எடுத்துக் காட்டி இதை எடுத்துக் கொண்டு ரூமுக்கு வா என மிரட்டுகிறார்.

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த விக்கி.. பார்வதி எடுக்கப்போகும் முடிவு, சந்தியாவுக்கு வந்த சந்தேகம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அதேபோல் பார்வதியும் புடவையை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு செல்ல அங்கே விக்கி ரூமுக்குள் காத்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் என்ன பண்ற இங்க இருந்து போ என அதிர்ச்சியில் சத்தம் போடுகிறார். பிறகு சத்தம் போட்டு நீயே உன்னை காட்டிக்கொடுத்து மானத்தை எடுத்துக்காத என விக்கி கூறுகிறார். பார்வதி தலையில் அடித்துக்கொண்டு உனக்கு என்னதான் வேண்டும் என கேட்கிறார். பாஸ்கர் உன் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு ஒரே ஒரு நாள் ஒரு மணி நேரம் என்னோடு பொண்டாட்டியாக வாழ வேண்டும் என மிரட்டுகிறார்.

சாயங்காலம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது என கூறுகிறார். ரொம்ப நேரமாகியும் ட்ரயல் ரூமிலிருந்து பார்வதி வெளியே வராததால் சந்தேகப்பட்ட சந்தியா வந்து கதவைத் தட்ட பார்வதி நீங்க போங்க நான் வருகிறேன் என அனுப்பி வைக்கிறார். அதன்பிறகு வீட்டுக்கு வந்ததும் பார்வதி தலை வலிக்கிறது என ரூமுக்கு சென்று பார்ப்பது ரூமில் விதியின் பார்வையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார் பார்வதி. எல்லா போட்டோக்களை எடுத்து வைத்து ஒரு இடத்தில் மறைத்து வைக்க முயற்சி செய்ய அந்த நேரத்தில் ஆதி வந்து கதவைத் தட்டுகிறார். பார்வதி கதவைத் திற காதல் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பதறிப் போய் கதவை தட்ட பிறகு போட்டோக்களை மறைத்து வைத்துவிட்டு பார்வதி கதவைத் திறக்கிறார்.

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த விக்கி.. பார்வதி எடுக்கப்போகும் முடிவு, சந்தியாவுக்கு வந்த சந்தேகம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

காதில் ஹெட்போன் போட்டுவிட்டு போன் பேசிட்டு இருந்தேன் அதனால் கேட்கவில்லை என கூறுகிறார். பிறகு சிவகாமி அவரை திட்டிவிட்டு கதவை பூட்டாதே என கூறிவிட்டு வெளியே சென்று விடுகிறார். சந்தியா ஏதாவது பிரச்சனையா என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நன்றாகத்தான் இருக்கிறேன் நீங்க போங்க என்று கூறுகிறார் பார்வதி. பிறகு விக்கி போன் செய்து வீடு பார்வதிக்கு ஒரு மணி நேரம் தன்னோடு வாழ வேண்டும் என கூறி மிரட்டுகிறார். இதனால் பார்வதி என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறார். நீ மட்டும் ஓகே சொல்லலனா இதே மாதிரி பாஸ்கர் வீட்டில அலங்காரம் நடக்கும் என மிரட்டுகிறார்.

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த விக்கி.. பார்வதி எடுக்கப்போகும் முடிவு, சந்தியாவுக்கு வந்த சந்தேகம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு மீண்டும் சந்தியா வந்து என்னிடம் எதையாவது மறைக்கிறியா என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என கூறுகிறார். பிறகு சிவகாமியின் அவரது கணவரும் ஊரில் யார் யாருக்கெல்லாம் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் எவ்வளவு பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் சரவணனுக்கு ஒருவர் போன் செய்து கோவிலுக்கு டொனேஷன் கேட்க வீட்டிற்கு அனுப்பி வைங்க நான் கொடுத்து விடுகிறேன் என சரவணன் கூறுகிறார். மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு என சரவணன் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள அங்க போயிட்டு வீட்டுக்கு மண்டபத்திற்குள் அலைஞ்சிட்டே இருக்க முடியாது என சிவகாமி கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட அர்ச்சனா எதையோ யோசிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.