சரவணன், கௌரியை மீட்க போன சந்தியாவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா மேப்பை பார்த்துக் கொண்டே காட்டுக்குள் நடந்து செல்ல திடீரென ஒரு பள்ளத்துக்குள் விழுந்து விடுகிறார். அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்ய அப்போது திடீரென ஒரு கை நீட்ட பிறகு அப்துல், சேட்டன் ஆகியோர் சந்தியாவின் உதவிக்காக வந்திருப்பது தெரியவந்துள்ளது.

பிறகு அனைவரும் சேர்ந்து காட்டுக்குள் முன்னேறிச் செல்லும் போது சேட்டனுக்கு கால் சுலுக்கி கொள்ள சந்தியா அதனை சரி செய்கிறார். அதன் பிறகு முன்னேறிச் செல்ல அப்துல் கன்னிவெடி மீது கால் வைத்து விடுகிறார். அடுத்து சந்தியா அப்துல்லா அதிலிருந்து ஒருவழியாக காப்பாற்ற கண்ணீர் வடித்த சத்தம் கேட்டு யாரோ நம்முடைய எல்லைகள் வந்து விட்டதாக தீவிரவாதிகள் உஷாராகின்றனர்.

சிவகாமி கடவுளிடம் என் பிள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது நீ என் உயிரை கூட எடுத்துக்க என கண்ணீர் விட்டு அழுது துடிக்கிறார். மறுபக்கம் போலீஸ் அதிகாரிகள் பழங்குடியின மக்கள் திருவிழாவை கொண்டாடக்கூடாது என சொல்ல அவர்கள் இந்த திருவிழாவை நடத்திய தீர வேண்டும் என சொல்ல இரவு எட்டு மணி வரை அவர்களுக்கு டைம் கொடுக்கின்றனர்.

பிறகு செல்வம் அந்த சந்தியா கண்ணு முன்னாடி வச்சு அவளுடைய புருஷன் சரவணன் மரியாதை வச்சிருக்க கௌரியின் கொன்னுட்டு அதுக்கப்புறம் அவளை கொல்லனும் என ஜோதியிடம் சொல்கிறார். மேலும் அவர்களை எதிர்கொள்ள எல்லா வேலைகளையும் செய்யுமாறு கட்டளையிடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.