போலீசுக்கு சந்தியா கொடுத்த ஐடியா காரணமாக கையும் களவுமாக சிக்கினார் செல்வம்.

Raja Rani 2 Episode Update 26.05.22 : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கடையில் சந்தியா செல்வத்திடம் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் போலீஸ் ஒவ்வொரு இடமாக விசாரணை செய்து கொண்டிருக்க போலீசை பார்த்ததும் செல்வம் வெடவெடத்து போகிறார். சந்தியா செல்வத்தை கூப்பிடுவது கூட தெரியாமல் பதற்றத்தோடு இருக்க பிறகு போலீஸ் வந்து புதுசாக கடையில் வேலை செய்பவர்கள் யாராவது இருக்கின்றார்களா என கேட்க யாரும் இல்லை என சொல்கிறார். ஆனால் சந்தியா இதோ இவன் வேலைக்கு வந்து நான்கு மாதம் தான் ஆகிறது என கூற ஆதார் கார்டு மற்றும் ஓட்டர் ஐடி எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறுகின்றனர்.

போலீசுக்கு சந்தியா கொடுத்த ஐடியா.. களவுமாக சிக்கிய செல்வம், கடைசியில் காத்திருந்த ஷாக் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஆனால் செல்வம் கடையில் நிறைய வேலை இருக்கிறது டெலிவரி கொடுக்க வேண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா ரொம்ப லேட் ஆகும் என கூற சந்தியா போலீசுக்கு எப்பவும் ஒத்துழைப்புக் கொடுக்க நீ போயிட்டு வா நான் கடையை பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார். வேறு வழியில்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல அங்கு புதிதாக வேலைக்கு வந்தவர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை செய்து கொண்டிருக்க அப்போது சந்தியா அங்கு வந்து பார்வதி கிடைத்துவிட்டால் ஆனால் மயக்கத்தில் இருக்கிறார். இன்னும் நினைவு வரவில்லை டாக்டர் உங்களை உடனடியாக அழைத்து வரச் சொன்னார் சொல்ல செல்வம் பதறி போகிறார்.

நம் திட்டம் பற்றி எல்லா விஷயமும் பார்வதிக்கு தெரியும். அவள் வாய் திறந்து சொல்றதுக்கு முன்னாடி அவளை கொன்று விட வேண்டும் என செல்வம் முடிவு செய்கிறார். போலீசை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்ல செல்வம் இங்கு வந்து டாக்டர் ஒருவரை அடித்து போட்டு அவருடைய யூனிஃபார்ம் எடுத்து போட்டுக்கொண்டு சந்தியா வெளியே சென்றதும் உள்ளே சென்று குளுக்கோஸ் பாட்டிலில் விஷ மருந்தை கலக்கிறார். இந்த நேரத்தில் சந்தியா உள்ளே வந்து விட அதன் பிறகு செல்வத்தை போலீஸ் சுற்றி வளைக்கிறது. ஆனால் மாஸ்க் அணிந்து இருந்ததால் அது செல்வம்தான் என கண்டுபிடிக்க முடியவில்லை.

போலீசுக்கு சந்தியா கொடுத்த ஐடியா.. களவுமாக சிக்கிய செல்வம், கடைசியில் காத்திருந்த ஷாக் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு அங்கிருந்த ஆக்சிசன் வாயுவை வெளியேற்றி அங்கிருந்து தப்பி விடுகிறார் செல்வம். பிறகு சந்தியா அவரை ஒரு வழியாக பிடிக்க அவரது கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பி விடுகிறார். பிறகு போலீஸ் சந்தியாவின் இந்த ஐடியாவை பாராட்டுகிறது. மேலும் சந்தியா தீவிரவாதி எப்படி பிடிப்பது எனவும் ஐடியா கொடுக்க அதை போலீஸ் ஏற்றுக்கொள்கிறது.

ஒன்றாக சேர்ந்து இந்த ஆபரேஷனை செய்து முடிக்க வேண்டும். தென்காசியில் இன்னொரு குண்டு வெடிப்பில் நடக்காமல் தடுக்கவேண்டும் என ஐஜி கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.