நல்ல பெயர் எடுக்க அர்ச்சனை செய்த வேலையால் கடைசியில் அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Raja Rani 2 Episode Update 25.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சிவகாமி கோவிலில் பாலபிஷேகம் செய்து விட்டு சரவணன் மனம் கஷ்டப்படக்கூடாது என வேண்டிக் கொண்டு வருகிறார். வீட்டுக்கு வரும் நேரத்தில் அனைவரும் கூடி இருக்க சரவணன் அம்மா எங்கே எனக் கேட்க அர்ச்சனா கோவிலுக்கு போய் இருக்காங்க எல்லாம் உங்களுக்காகத்தான் என கூறுகிறார். உடனே சிவகாமி அர்ச்சனாவை அதட்டி நான் ஒன்னும் ஒருத்தருக்காக கோவிலுக்கு போகலையா குடும்பம் நல்லா இருக்கணும் தான் வேண்டிக்கிட்டு வந்தேன். இனி இந்த மாதிரி பேசுற வேலை வச்சுக்காத என திட்டுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

நல்ல பெயர் எடுக்க அர்ச்சனா செய்த வேலை.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

எனக்கு எல்லோரும் சேர்ந்து குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரலாம் என திட்டமிட்டு சந்தியாவை இட்லி ஊற்றி வைக்க சொல்கிறார். அர்ச்சனாவை சாம்பார் வைக்க சொல்கிறார். சந்தியா போட்டியில் கலந்துக்க இன்னும் நேரம் இருக்கு ஏதாவது முயற்சி செய்யலாம் என கூறுகிறார். ஆனால் சிவகாமி இதைப்பற்றி திரும்பவும் பேச வேண்டாம். என் பையன் கஷ்டப்படுத்த இன்னமும் என்னால் பார்க்க முடியாது என கூறி விடுகிறார். பிறகு எல்லாரையும் போய் வேலையைப் பார்க்கச் சொல்கிறார்.

அர்ச்சனா பழைய பேப்பரில் போட்ட ப்ளைட் டிக்கெட் மற்றும் இன்விடேஷன் எடுத்து வந்து நல்ல பெயர் வாங்க கடைக்கு போயிட்டு வருவதாக சொல்லி விட்டு போகிறார். கடைக்கு போன இவர் பழைய பேப்பர்களை அலசி எடுத்து ஃபிளைட் டிக்கெட் மற்றும் இன்விடேஷன் எடுக்கிறார். ப்ளைட் டிக்கெட் இருந்தால்தானே போக முடியும் என அதனை கிழித்துப் போட்டுவிட்டு இன்விடேஷன் மட்டும் எடுத்து கொண்டு வீட்டிற்கு அரக்கப் பறக்க ஓடி வந்து கொடுக்கிறார்.

Maanaadu Public Review | Maanaadu Public Opinion | Maanaadu Public Talk

நல்ல பெயர் எடுக்க அர்ச்சனா செய்த வேலை.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

வீட்டில் உள்ள எல்லோரும் இன்விடேஷன் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் ஆதி அதுதான் பிளைட் டிக்கெட் இல்லையே அப்புறம் எப்படி போக முடியும் என கூறுகிறார். சந்தியா உடனே போனை கட் செய்துவிட்டு உடனே கிளம்பினா பிளைட்டை பிடித்து விடலாம் என கூறுகிறார். ஆனால் சிவகாமி நான் வரவில்லை கோயிலில் பாலபிஷேகம் சொல்லி இருக்கேன் அதை விட்டுவிட்டால் நன்றாக இருக்காது என கூறுகிறார். சிவகாமியின் கணவரும் சிவகாமி வராமல் நானும் வரவில்லை என கூறி விடுகிறார். ‌‌‌‌‌

அர்ச்சனா கடைசியில இப்படி ஆகிடுச்சே என வயித்தெரிச்சலில் தவிக்கிறார். சிவகாமியும் அவரது கணவரும் இல்லாமல் சந்தியா சரவணன் மட்டும் போட்டியில் கலந்துகொள்ள செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.