சந்தியா கையில் ஆதாரம் சிக்க வசமாக சிக்கிக்கொள்ள உள்ளார் செல்வம்.

Raja Rani 2 Episode Update 25.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா வெளியில் சென்று வருவதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பியபோது பாஸ்கரின் குடும்பம் வீட்டிற்கு வருகிறது. இதனைப் பார்த்து பதறிய சந்தியா உடனே பாஸ்கரை ரூமுக்குள் இருந்து வெளியே வரவேண்டாம் கதவை லாக் செய்து கொள்ளுங்கள் என கூறுகிறார்.

சந்தியா கையில் சிக்கிய ஆதாரம்.. வசமாக சிக்க போகும் செல்வம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு இருவரும் இணைந்து பார்வதி மற்றும் பாஸ்கர் பற்றி கேட்க இருவரும் வெளியில் சென்று விட்டதாக வருவதற்கு கால தாமதமாகும் என சொல்லி சமாளிக்கின்றனர். பிறகு குடும்பத்தாரிடம் பேசிவிட்டு இருவரும் வீட்டிற்கு கிளம்பி விடுகின்றனர். ஒருவழியாக அவர்களிடம் சமாளித்து தப்பித்ததால் பெருமூச்சு அடைகின்றனர்.

அதன் பின்னர் சந்தியா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இந்த பென்டிரைவ் உங்களது வீட்டில் கிடைத்ததாகக் கூறுகிறார். அங்கு பென்டிரைவை ஓப்பன் செய்து பார்க்க பார்வதி புகைப்படம் மற்றும் கோவில் புகை படங்கள் இருப்பதால் பார்வதியை கடைசி அவரை தீவிரவாதிகள் அவர்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதுபற்றி யாரிடமும் எதையும் கூற வேண்டாம் சந்தேகப்படும்படியான என்றால் அவற்றைப் பற்றி தெரியப்படுத்துமாறு பொலிஸ் சந்தியாவிற்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

சந்தியா கையில் சிக்கிய ஆதாரம்.. வசமாக சிக்க போகும் செல்வம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு சந்தியா நான் நினைத்தது போலவே இது மிகப்பெரிய சீரியஸா இருக்கிறதே என நினைக்கிறார். பிறகு கடைக்குச் செல்ல அங்கு செல்வன் சக்கரைக்கு கோர்ட் ஒன்றை வாங்கி கொடுத்து இருப்பதை பார்த்து பாராட்டுகிறார். சந்தியா கடையில் சந்தேகப் பார்வையோடு பார்க்க செல்வன் திருதிருவென முழித்தார். இதுதான் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.