சந்தியாவிடம் வசமாக சிக்க உள்ளார் அர்ச்சனா.

Raja Rani 2 Episode Update 24.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் போட்டியில் கலந்துக்க முடியாமல் போனது என் வீட்டில் உள்ள அனைவரும் சோகத்தோடு சாப்பிட அமர்கின்றனர். ஆனால் ஆதி எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு எதையுமே அளவுக்கு மீறி ஆசைப்படக் கூடாது என கூறுகிறார். உடனே அர்ச்சனா நாம சொல்றதெல்லாம் யார் இந்த வீட்டுல கேட்கிற ஆதி என கூட்டு சேர்ந்து கொள்கிறார். இந்த வீட்டில் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வெச்சு தான் பார்க்கிறாங்க என கூற செந்தில் அர்ச்சனாவை அடக்குகிறார். ‌‌‌‌‌‌‌‌‌‌‌

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

சந்தியாவிடம் வசமாக சிக்க போகும் அர்ச்சனா.. நடு இரவில் நடந்த கூத்து - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட் ‌

இதையெல்லாம் கேட்டுவிட்டு சரவணனின் அப்பா சாப்பிட மனமில்லாமல் எழுந்து கொள்கிறார். அவரையடுத்து சிவகாமியும் சாப்பிடாமல் சென்று விடுகிறார். சந்தியா எப்படியாவது போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க அப்போது வந்த சரவணனிடம் நாம ஏன் நேராக போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்று நடந்ததைச் சொல்லி வாய்ப்பு கேட்க கூடாது என கூறுகிறார். சரவணன் அதெல்லாம் வேண்டாம் ஏற்கனவே நமக்கு நிறைய சலுகை கொடுத்துட்டாங்க என சொல்கிறார்.

இந்தப் பக்கம் பாஸ்கர் பார்வதிக்கு போன் செய்து இந்த வீட்டு தெரு முனையில் தான் இருப்பதாக கூறுகிறார். பிறகு பார்வதி தூது செல்ல பாஸ்கர் உனக்கு என்கிட்ட பேச விருப்பம் இல்லையா? இந்த கல்யாணத்துல விருப்பமில்லையா சொல்லிடு நானும் மனச தேத்திக்கிட்டு எங்க வீட்ல இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லி விடுகிறேன் என கூறுகிறார். பார்வதி அப்படி எல்லாம் இல்லை தயவுசெய்து அப்படி செய்து விடாதீர்கள். கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது சத்தியமா உங்க கூட மட்டும் தான் என கூறி பாஸ்கரை சமாதனம் செய்து விட்டு வீட்டுக்குச் செல்கிறார்.

ஒழுங்கா படம் எடுத்து இருந்தா…நான் ஏன் தப்பா Review சொல்ல போறேன் – Blue Sattai Maran Bold Speech

சந்தியாவிடம் வசமாக சிக்க போகும் அர்ச்சனா.. நடு இரவில் நடந்த கூத்து - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட் ‌

சிவகாமி ரூமுக்குள் அமர்ந்து அழுது கொண்டிருக்க அவருடைய கணவர் ஆறுதல் கூற சரவணனின் மனநிலை எப்படி இருக்கும்? அவன் அவனுக்கு நீ எதுவுமே ஆசைப்பட்டது இல்ல. இப்போ ஆசைப்பட்டது கூட நடக்கலாம் என நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என இதுக்கப்புறம் அவன் எதற்குமே ஆசைப்பட மாட்டான் என கண்கலங்க சிவகாமியின் கணவர் ஆறுதல் கூறுகிறார். பிறகு சிவகாமி நாம எல்லோரும் சேர்ந்து குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வருவோம் என சொல்ல அவரும் சரி என சொல்கிறார்.

கிச்சனில் அர்ச்சனா 7 பூரி சாப்பிட்டும் சந்தோசத்தில் பசி தீரல என சாப்பிட வருகிறார். இதையே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர் விக்க சந்தியா தண்ணீர் கொடுக்கிறார். பிறகு சந்தியாவிடம் உனக்கு என்மேல எந்த சந்தேகமும் இல்லைல என கேட்கிறார். ஏற்கனவே நகை காணாமல் போன விஷயத்துல நீதான் வீடியோ காமிச்சு என்னை மாட்டிவிட்ட. இப்பவும் என் மேல சந்தேகப்படக் கூடாது என்றுதான் கேட்கிறேன். கண்டிப்பா நாங்க போட்டியில் கலந்துப்போம்‌. கடவுள்னு ஒருத்தர் இருந்தா நீதி நேர்மை ஜெயிக்கும்னு இருந்தா கண்டிப்பா நாங்க கலந்துகிட்டு ஜெயிப்போம் என கூறுகிறார். அதெல்லாம் எதுவும் முயற்சி பண்ணாத என்பதுபோல அர்ச்சனா பேசுகிறார். இதனால் சந்தியாவின் மனதில் நிச்சயம் அர்ச்சனா மீது சந்தேகம் வரும்.

இந்த பக்கம் ரூமுக்கு வந்த அர்ச்சனாவிடம் ப்ளைட் டிக்கெட், இண்விடேஷன் கிடைச்சா கூட அவங்களாலே கலந்துக்க முடியாது என சொல்கிறார். அப்படினா நாளைக்கு ஒரு திட்டம் போட வேண்டியதுதான். பழைய பேப்பர் கடை காரன் கிட்ட போயிட்டு அந்த ஃப்லைட் டிக்கெட் மற்றும் இன்விடேஷன் எடுத்து வந்து வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்து அத்தையிடம் நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என்று ப்ளான் போடுகிறார் அர்ச்சனா. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிகிறது.