நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஆதிக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தார் சந்தியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் குடும்பத்தார் எல்லோரும் மண்டபத்துக்கு போக சந்தியா ஆதி நகை வாங்கிய கடைக்கு சென்று அது குறித்து விசாரிக்க முதலில் கடைக்காரர் கஸ்டமர் விவரங்களை சொல்ல முடியாது என சொல்ல அந்த நேரத்தில் சந்தியாவுக்கு தெரிந்த போலீஸ் அவரைப் பற்றி விசாரிக்க அதன் பிறகு கடைக்காரர் சந்தியா கேட்ட விபரங்களை கூறுகிறார்.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஆதிக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த சந்தியா... சிவகாமி சொன்ன வார்த்தை - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஆதி பெயரில் நகை வாங்கிய விஷயம் தெரிய பிறகு எல்லோரும் மண்டபத்தில் சந்தியாவுக்காக காத்துக் கொண்டிருக்க அங்கு வருகிறார். நிச்சயதார்த்தம் முடிந்ததும் போட்டோ எடுக்கும் போது ஜெஸ்ஸியிடம் ஆதி உனக்கு எதுவும் கிப்ட் வாங்கி தரலையா என கேட்க வைர நகை இந்த மாதிரி ஏதாவது கேளு என சொல்ல அதான் ஏற்கனவே வாங்கி கொடுத்தானே என ஜெசி உளறி விடுகிறார். ஆனால் ஆதி அதை அங்கு சமாளித்து விடுகிறான்.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஆதிக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த சந்தியா... சிவகாமி சொன்ன வார்த்தை - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு வீட்டுக்கு வந்த சிவகாமி காணாமல் போன ஐந்து லட்சத்தை எப்போ கண்டுபிடிக்க போற என பேச்சு ஆரம்பிக்க அது அது எதுக்கு இப்ப என பேச பிறகு சந்தியா ஆதியிடம் சென்று இத பிள்ளை காண்பித்து விசாரிக்க அதை மன்னிச்சுடுங்க பெரிய தப்பு பண்ணிட்டேன் என காலில் விழுந்து கெஞ்சுகிறான். பிறகு வைர நகை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என கேட்க ஆதி திருத்திருவென முழிக்க பணத்தை கட்டு போடும் பேண்டை காண்பித்து மேலும் அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.