ஜெஸ்ஸி கர்ப்பம் என தெரிந்ததும் சிவகாமி குடும்பம் ரவுண்டு கட்டி அவரை தீட்டி தீர்க்க உண்மைகளை உடைத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு ஜெஸ்ஸி மயங்கி விழ அனைவரும் பதறிப் போக சந்தியா முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை சுயநினைவுக்கு கொண்டு வருகிறார். திடீரென வள்ளி பாட்டிக்கு ஜெசி மீது சந்தேகம் வர அவரது கையைப் பிடித்து பார்க்க கர்ப்பம் என்று அறிகிறார்.

கர்ப்பத்தால் ரவுண்ட் கட்டி அசிங்கப்படுத்திய சிவகாமி குடும்பம்.. உண்மையைப் போட்டு உடைத்த ஜெஸ்ஸி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

உடனே உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா என கேட்டேன் ஜெசி இன்னும் இல்லை என சொல்ல அப்புறம் எப்படி வயித்துல குழந்தை என கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆதி எதுவும் பேசாமல் இருக்க சிவகாமி உட்பட அனைவரும் ரவுண்ட் கட்டி திட்டுகின்றனர். மேக்கப் போட்டதற்காக ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை டியூட்டி முகத்தில் அடித்து எடுத்துக்கிட்டு வெளியே போன என சிவகாமி திட்டுகிறார்.

நான் எதுக்கு வெளியே போகணும் என ஜெசி சொல்ல சிவகாமி இங்கேயே இருந்து பேச இது என்ன உன் புருஷன் வீடா என கேட்க நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் இது என் புருஷன் வீடு தான் என சொல்கிறாள். அப்படியே வாக்குவாதம் பெரிதாக ஒரு கட்டத்தில் ஜெசி என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அதுதான் அப்பா என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

வள்ளி பாட்டி என் பேரன் ஆதி பேங்க்ல வேலை பார்க்கிறான் அவனை வளர்ச்சி போடலாம்னு இப்படி பொய் சொல்றியா என சொல்ல ஜெசி கொஞ்சம் நிறுத்துங்க உங்க பேரன் கை நிறைய சம்பாதிக்கிறான். எங்க அப்பா பை நிறைய சம்பாதிக்கிறார் நான் பணக்கார வீட்டு பொண்ணு இது ஆதிக்கு தெரியும் கேட்டு பாருங்க என கூறுகிறார்.

கர்ப்பத்தால் ரவுண்ட் கட்டி அசிங்கப்படுத்திய சிவகாமி குடும்பம்.. உண்மையைப் போட்டு உடைத்த ஜெஸ்ஸி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு ஆதி பதில் சொல்லு இல்லனா நான் எல்லாரும் முன்னாடியும் தப்பான பெண்ணாக பதிவாகி விடுவேன் என ஜெஸ்ஸி சொல்ல ஆதி அமைதியாகவே இருக்க பளாரென அறைகிறார். ஆனாலும் எது சொல்வதை யாரும் நம்பாமல் இருக்க சிவகாமி முதலில் வீட்டை விட்டு வெளியே போ என கூறுகிறார். செந்தில் சரவணன் இருவரும் வீட்டை விட்டு வெளியே போக சொன்ன ரவி ஆதி எதுக்கு அமைதியா இருக்க என கேள்வி எழுப்புகிறார். ஆதி திருத்திருவென முழிக்க இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.