சரவணன் கைக்கு முக்கிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது.

Raja Rani 2 Episode Update 24.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு கோவில் சுற்றி சுற்றி எடுத்த போட்டோக்களையும் பார்வதி போட்டோவையும் போனிலிருந்து பென்டிரைவிற்கு காபி செய்கிறார் செல்வம். இந்த பென் ட்ரைவை தன்னுடைய இயக்கத்தை சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்க முயற்சி செய்ய இந்த நேரத்தில் சரவணன் சந்தியாவோடு சரியாக கடைக்கு வந்து விடுகிறார்.

சரவணன் கைக்கு வந்த முக்கிய ஆதாரம்.. சிக்க போகும் செல்வம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு செல்வம் திருதிருவென முழிக்க டெலிவரி கொடுக்க வேண்டியதை கொடுத்தாச்சா என கேட்க இப்போது கொடுத்து விடுகிறேன் என சொல்கிறார். பிறகு சரவணன் சந்தியாவை கடையில் இருக்க சொல்லிவிட்டு செல்வத்தை அழைத்துக்கொண்டு டெலிவரி கொடுக்க செல்கிறார்.

பின்னாடியே பென்டிரைவை வாங்கி வந்த நபரும் செல்கிறார். அவரிடம் பென்டிரைவை கொடுக்க முயன்றோம் சரவணன் கூட இருந்ததால் கொடுக்க முடியாமல் இருக்க ஒரு இடத்தில் போலீசார் எல்லா வாகனங்களையும் சோதனை செய்து கொண்டிருக்க இதைக்கேட்ட செல்வம் அதிர்ச்சி அடைந்தார். உடனே சரவணனிடம் வண்டியை திருப்புங்க வேறு வழியில் சென்று விடலாம் என சொல்ல அவர் முறையாக இந்த வழியே செல்லலாம் என கூறுகிறார்.

இதனால் வேறு வழியில்லாமல் கையில் இருந்த பென் ட்ரைவை சரவணன் பாக்கெட்டில் போட்டு விடுகிறார். அதன்பிறகு போலீசார் சரவணனை பார்த்ததில் நீங்க ஸ்வீட் கடை சரவணன் தான் சென்னைக்கு கூட போயி சமையல் போட்டியில் ஜெயித்து வந்தீங்க கரெக்டா எனக் கேட்க சரவணன் ஆமாம் என கூற அதன்பிறகு அவருக்கு போன் வர போலீசார் சரி நீங்க கெளம்புங்க என அனுப்பி வைத்து விடுகின்றனர்.

பிறகு வீட்டைக் டெலிவரி செய்து விட்டு பணத்தை எடுத்து வந்து சரவணன் பாக்கெட்டில் வைப்பது போல பென்ட்ரைவை எடுக்க முயற்சி செய்கிறார் செல்வம். சரவணன் பணத்தை கடையில் எடுத்துச் சென்று வைக்குமாறு கூறுகிறார். செல்வம் எவ்வளவோ முயற்சி செய்தும் பென் ட்ரைவை எடுக்க முடியவில்லை.

சரவணன் கைக்கு வந்த முக்கிய ஆதாரம்.. சிக்க போகும் செல்வம் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மேலும் சரவணன் எனக்கு வெளியில் வேலை இருக்கு நீ பஸ்ஸில் கடைக்குச் சென்று விடு என கூறுகிறார். சரி என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடுங்க என செல்வம் சொல்ல அழைத்துக்கொண்டு செல்கிறார். அப்போது முயற்சி செய்து பென்டிரைவை எடுக்க முடியவில்லை. வீட்டில் சந்தியா ஏதோ யோசனையில் இருந்தபோது வந்த சரவணன் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் எனக் கேட்க தண்ணீரை எடுத்து வந்து சந்தியா கொடுக்க கைதவறிக் கீழே கொட்டி விடுகிறது. பிறகு சரவணன் மேட் எடுத்துக் கொண்ட முயற்சி செய்ய கால் வலிக்கு பிடித்துக்கொண்டு பாக்கெட்டில் இருக்கும் சில்லரை, பென்ட்ரைவ் என எல்லாம் கீழே கொட்டுகிறது.

சரவணனை பெட்டில் உட்கார வைத்து சந்தியா அவற்றை எடுக்கிறார் ஆனால் பென்ட்ரைவ் கட்டிலுக்கு அடியில் சென்று விடுகிறது. இந்தப் பக்கம் செல்வம் பென் ட்ரைவை தொலைத்து விட்டேன் என தன்னுடைய இயக்கத்தினரிடம் சொல்ல அவர்கள் செல்வத்தை கடுமையாக திட்டுகின்றனர். அதில் இருக்கும் ஆதாரங்கள் மட்டும் யாரிடமாவது கிடைத்தால் எல்லோருடைய கதையும் முடிந்துவிடும் என கூறுகின்றனர். நாளைக்கு எப்படியாவது பென்டிரைவை வாங்கி வந்து கொடுத்து விடுகிறேன் என செல்வம் சொல்கிறார். எல்லோரிடமும் மன்னிப்பும் கேட்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.