சந்தியா கையில் ஆதி பணம் திருடியதற்கான ஆதாரம் சிக்கியுள்ளது‌.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி ஜெஸ்ஸிக்கு போன் போட்டு உனக்கு நான் வைர நெக்லஸ், கிப்ட் எல்லாம் வாங்கி கொடுத்ததை யார் கிட்டயும் சொல்லாத குறிப்பா சந்தியா அண்ணி கிட்ட சொல்லாத ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க என கூறுகிறான்.

சந்தியா கையில் சிக்கிய ஆதாரம்.. ஆதிக்கு இருக்கு ஆப்பு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து அர்ச்சனா ரூமுக்குள் செந்திலிடம் சந்தியா கண்டிப்பா போலீசாக முடியாது அத்தை கண்டிஷன் மேல கண்டிஷன் போட்டா ஒருத்தரால எப்படி சமாளிக்க முடியும் அத்தை பிளான் பண்ணி தான் பண்றாங்க என சொல்ல செந்தில் சந்தியா அண்ணி இது எல்லாத்தையும் தாண்டி கண்டிப்பா போலீஸ் ஆவாங்க என கூறுகிறார்.

பிறகு ரவி சிவகாமியிடம் சந்தியாவுக்கு இப்படி டெஸ்ட் மேல டெஸ்ட் வெச்சா அவ எப்படி போலீஸ் ஆவா? இதெல்லாம் நல்லாவா இருக்கு என சொல்ல முதல்ல அவ இந்த பணத்தை கண்டுபிடிக்கட்டும் இது ஒரு பயிற்சியாய் இருக்கட்டும் என சிவகாமி உறுதியாக சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறார்.

பிறகு சந்தியா மயிலை சந்தித்து பண கட்டு போடும் பேண்ட் குறித்து விசாரிக்க பிறகு உன்னால் எனக்கு சில வேலைகள் ஆக வேண்டி இருக்கு என கூறுகிறார். மயிலு கண்டிப்பாக உங்களுக்கு நான் உதவி செய்கிறேன் என சொல்கிறார்.

சந்தியா கையில் சிக்கிய ஆதாரம்.. ஆதிக்கு இருக்கு ஆப்பு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு எல்லோரும் நிச்சயதார்த்தத்திற்காக மண்டபத்துக்கு கிளம்ப மயிலு எனக்கு வீட்டில் கொஞ்சம் வேலைகள் இருக்கு அதை முடிச்சிட்டு வருகிறேன் என சொல்லி வீட்டிலேயே நிற்க பிறகு சந்தியா பர்ஸை எங்க வெச்சேன்னு தெரியல தேடி எடுத்துக்கிட்டு வரேன் நீங்க முன்னாடி போங்க என சொல்லி சந்தியா அவர்களை அனுப்பி வைத்துவிட்டு மயிலுடன் சேர்ந்து ஆதி ரூமில் தேட அவரது கையில் வைர நகை வாங்கிய ரசீது கிடைக்கிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.