Raja Rani 2 Episode Update 23.09.21

சிவகாமி சரவணன் இடையே இருக்கும் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளார் சந்தியா.

Raja Rani 2 Episode Update 23.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் அனைவரிடமும் நடித்ததாக அவளுடைய அப்பா சிவகாமியுடன் கூறியதை தொடர்ந்து சிவகாமி சரவணனிடம் சண்டை போட்டார். சந்தியா இது குறித்து எவ்வளவு பேச முயற்சி செய்து அவரை பேச விடவில்லை.

முக்தி நிலை அருளும், தென்திசை கயிலாயம்.!

இதனைத் தொடர்ந்து சந்தியா தன்னுடைய மாமியாரை சந்தித்து நடந்ததை கூறுகிறார். உங்க பையன் எனக்காக ஒன்னும் நடிக்கல உங்களுக்காகவும் நடித்தார் என கூறுகிறார். நாளைக்கு நான் வீட்டை விட்டு வெளியே போனால் சிவகாமி மருமகள் கொடுமை படுத்தி அனுப்பி விட்டாள் என யாரும் சொல்லக்கூடாது என்பதால்தான் அவர் தன் மீது பழியைப் போட்டு கொண்டு நடித்தார் என கூறுகிறார்.

பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் Thala Ajith – சாகசப் பெண்ணிடம் ஆலோசனை! | Valimai

அதன் பின்னர் ஆதியும் பார்வதியும் பசிக்குது ஆனா யாரும் வரல என புலம்பிக் கொண்டிருக்கின்றனர். பார்வதி ஒவ்வொருவராக போய் சாப்பிட கூப்பிட்டும் சிவகாமி வராததால் சாப்பிட தயங்குகின்றனர். அதன் பின்னர் சிவகாமி அனைவரையும் சாப்பிட அழைக்கிறார். சரவணன் சாப்பிட வராததால் ரூமிற்கு சென்று அவரை அழைத்து வருகிறார்.

அதன் பின்னர் என்னை மன்னிச்சுடு சொல்லுங்கம்மா என சரவணன் கேட்க மன்னிச்சிட்டேன் எனக் கூறி அழைத்து வருகிறார். அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். சரவணனின் அப்பா இதற்கெல்லாம் காரணம் சந்தியா தான் என கூறுகிறார். பின்னர் சிவகாமி இதுக்கெல்லாம் நீதான் காரணம் என நினைச்சுக்காத என கூறுகிறார். போயிட்டு சாப்பிட்டு இருக்கட்டும் தான் சுத்தமா கழுவி இதை நான் வந்து திரும்பவும் பார்ப்பேன். சுத்தமா இல்ல நான் திரும்பவும் கழுவ சொல்லுவேன் என கூறுகிறார். எது எப்படியோ தன்னுடைய மாமியார் தன்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருப்பதாக சந்தியா கூறுகிறார்.

இன்னொருபுறம் பார்வதியின் முன்னாள் காதலன் பாஸ்கர் இமான் நேரத்தில் பணத்தை கீழே போட்டது போல போட்டு விட்டு அதனை பாஸ்கர் எடுத்துக் கொடுத்து பின்னர் பாஸ்கரின் பேக்கை ஒருவர் அடித்து செல்வது போல டிராமா செய்து அந்த பேக்கை பார்வதியின் முன்னாள் காதலன் கைப்பற்றி கொடுத்தது போல நாடகம் போட்டு பாஸ்கரிடம் நண்பராக பழகிய தொடங்குகிறார். அதன் பின்னர் பார்வதி மீது பாஸ்கருக்கு வெறுப்பை உண்டாக்கி திருமணத்தை நிறுத்த திட்டமிடுகிறார். இத்துடன் இருக்கிறது ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்.