சந்தியாவுக்கு வந்த சிக்கலால் கடைசி நேரத்தில் சரவணன் உதவி செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட் சந்தியா ரவுடி தப்பிச் சென்றதால் என்ன பதில் சொல்வது எனக்கு தெரியாமல் ஸ்டேஷன் வர அங்கு வரும் எஸ்பி ரவுடி எங்கே என கேட்க சந்தியா எஸ் பிக்கு பதில் சொல்ல வர அப்போது அவருடன் பணிபுரியும் போலீஸ் இங்க இருக்கான் என ரவுடியை கொண்டு வந்து ஒப்படைக்கிறார்.

அதன் பிறகு சந்தியா எப்படி இது நடந்தது என கேட்க அந்த போலீஸ் சரவணன் ரவுடியை பிடித்துக் கொடுத்த விஷயத்தில் சொல்ல சந்தியா சந்தோஷப்படுகிறார். இந்த பக்கம் வீட்டில் சிவகாமி பூஜைக்கு எல்லாம் ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சந்தியாவுக்காக காத்திருக்க எல்லோரும் பசிக்குது பூஜை செய்யலாம் என பேசிக்கொண்டு இருக்க சரவணன் சந்தியா வீட்டிற்குள் நுழைகின்றனர்.

ஏற்கனவே அர்ச்சனா சந்தியா சாப்பிட்டு இருப்பா என கொளுத்தி போட நீ ஒரு பூஜைல கலந்துக்க வேண்டாம் நீ சாப்பிட்டுவிட்டு வந்திருக்க என்ன சொல்ல சந்தியா இல்ல அத்தை நான் நீங்கள் சொன்னதுனால பச்சை தண்ணி கூட குடிக்காமல் தான் வந்திருக்கிறேன் என சொல்ல அது எனக்கு தெரியும் சில பேருக்கு புரிய வைக்கணும் என்பதற்காக தான் கேட்டேன் என சொல்லி அர்ச்சனாவுக்கு ஷாக் கொடுக்கிறார்.

அதன் பிறகு சரவணன் சந்தியா இருவரும் ரூமில் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அப்போது சந்தியா கால் வலிப்பதாக சொன்ன சரவணன் காலை அமுக்கி விட இதை சிவகாமி வெளியிலிருந்து பார்த்து விடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.